Ad Widget

சுனாமியில் சிக்கியுள்ளார் சம்பந்தன்!

விக்னேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சிக்கித் தவிக்கிறார் என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும்கூட விக்னேஸ்வரனே பிரபலமானவராக காணப்படுகின்றார். உதாரணமாக விக்கினேஸ்வரன் எனும் சுனாமி பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் சிக்கி தவிக்கிறார். இந்த சுனாமி பேரலையிலிருந்து சம்பந்தனால் மீண்டு வர முடியவில்லை. வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதன் மூலம் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. விக்கினேஸ்வரன் மேலே இருக்கின்றார். சம்பந்தன் கீழே இருக்கின்றார். அதன்படி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் காணப்படுகின்றன என்றார்

Related Posts