- Wednesday
- August 5th, 2026
“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை...
இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள...
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டொனல்ட் ட்ரம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவின் புதிய...
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று...
யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...
தமிழர்கள் அனைவரும் புலிகள் என திட்டிய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழ் மக்கள் உட்பட கெகலியாமடு கிராமசேவகர் மற்றும் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை...
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி...
தென்பகுதி மக்கள் சமஷ்டி ஆட்சிக்கும், வடக்கு மக்கள் ஒற்றையாட்சிக்கும் அச்சப்படுவதாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரண்டு சொற்பதங்கள் தொடர்பாக வாதம் நடத்திக்கொண்டிருப்பதை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய முறை தொடர்பில்...
கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின்...
அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவ குழுவினால் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இதன்படி ஐம்பது பேர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் நேற்று (வியாழக்கிழமை) வரை முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த சத்திர சிகிச்சை குழு தெரிவித்துள்ளது. சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும்...
ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர்...
வட்டுக்கோட்டை சித்தன்கேணி பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை சிற்றூந்தில் பயணித்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.தனது தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்தி , யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளார், எனினும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் ஆவா குழுவிற்கும் கோட்டாபய மற்றும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என...
யாழ்ப்பாணத்தை அண்மைய காலமாக கதிகலங்க வைத்து வரும் ஆவா எனப்படும் குழுவின் பின்னணியில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரே செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் அமைச்சர்களே தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு தொடர்பில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இனவாதி என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அழைத்துள்ளார். ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர் என்றும், எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு...
சித்தன்கேணி - அந்திராணி வாய்க்கால், சங்கரத்தை பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு...
வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார்...
Loading posts...
All posts loaded
No more posts
