- Wednesday
- December 31st, 2025
யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீரகேசரி பத்திரிகையின் அலுவலகம் மீது, இன்று திங்கட்கிழமை (31) காலை போத்தல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிர்வாகத்தால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவின் பதிவின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ளதுடன் வலிவடக்கில் மேலதிகமாக 460ஏக்கர் காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலமையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான...
அகதிகளின் வருகையைத் தடுக்கும் முகமாக அவுஸ்திரேலியாவுக்குள் கடல்வழி மூலமாக நுழையும் மக்களுக்கு, அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் சட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த அறிவிப்பினை அவுஸ்திரேலியப் பிரதமர் மார்க்கம் டர்ன்புல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இச்சட்டத்தின்படி கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகள் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்....
நாளைக்கு யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மைத்திரிபாலசிறிசேன, பலாலி இராணுவ கொன்டோன்மன்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர் பிரதேசத்தினை மக்களிடம் கையளிப்பது தொடர்பான தகவலை வெளியிடவுள்ளார். பலாலி விமான ஓடுபாதைக்கு மேற்காக உள்ள பொதுமக்களின் காணிகளே நாளை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படவுள்ள குறித்த...
யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு பிரபாகரன் படை என்ற பெயரில் இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாண நகரத்தின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும்...
அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதி வற் வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றுக்காக தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டை பயன்படுத்துபவர்களின் கட்டணத்திலேயே இவ்வாறு கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு வரிகளுக்கும்...
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பாரிய விசனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் மக்கள் வாழும், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையிலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பாறையிலிருந்து பௌத்த மதகுருமார்களுடன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பயணம் செய்யவுள்ளார். கீரிமலைப் பிரதேசத்தில் வீடற்றோருக்கு புதிய வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை...
வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் நிர்வாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகளை மூடி மறைத்து விட்டு பாதுகாப்பு படைகளை முகாமிற்குள் அரசாங்கம் முடக்கி விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை...
1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கு, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத்...
யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதனைக் கண்ணால் கண்ட மாணவன் கஜன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரீ.வி பதிவுகள் மற்றும் ஏனைய தகவல்கள் மூலம் இவ்விடயம் வெளிவந்தவண்ணமுள்ளதாக ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து நேற்றைய தினம் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலை அடுத்து அங்கு வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ். மாவட்டத்தில் பொலிஸார் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுத்தப்படாமல் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, கலகம் தடுப்பு பொலிஸாரும் ஆங்காங்கே பாதுகாப்பு...
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில், அண்மையில் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் விளைவாக உயிரிழக்க நேர்ந்த சம்பவத்துக்கு, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, கடும் கண்டனத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாணவர்கள் இருவரும் உண்மையில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கும் பட்சத்தில், துப்பாக்கி பிரயோகமானது பின்னிருக்கையில் இருந்தவரை...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் (25 ) வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும்...
உரும்பிராய் சந்திப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், உறவினர்களுடன் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில், அலைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் தன்னை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து...
யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும்...
சுன்னாகம் சந்தைப் பகுதியில், முகமூடி அணிந்திருந்த நபர்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மதியம், இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு 'ஆவா' குழு உரிமை கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் 'ஆவா' குழுவினரால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளிலேயே இவ்வாறு உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர் நீத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர்...
கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள போக்குவரத்து பொலிஸார் பயன்படுத்தும் கொண்டகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த கொட்டகையில் நின்று பொலிஸார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை வழமையான ஒன்றாகும். ஆயினும் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது பொலிஸார் எவரும் அங்கு இருந்திருக்கவில்லை எனக்குறிப்பிடப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இனம் தெரியாத நபர்கள் நெருப்பு பந்தம் ஒன்றை...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலை பீடங்கள் இயங்காது என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை...
Loading posts...
All posts loaded
No more posts
