- Thursday
- August 14th, 2025

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு...

தெற்கில் சிலர், எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். என்னைப் பேயாகவும், பூதமாகவும், தகாத...

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் இன்றாகும். இந்த இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பித்த தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) அணிதிரண்ட பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன. மேலும் குறித்த மகஜரில், ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய...

யாழ்ப்பாணம் கீரிமலை இந்துக்களின் புண்ணிய பூமியாக பார்க்கப்படுகையில் அதனை புனித பூமியாக்கி அங்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுவினர் தலைவர் ச.சஜீவன் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை...

இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டியிருப்பதாகத் தெரிவித்து அவருக்கு எதிராகக் கண்டனப் பேரணியொன்று நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புறமாகிய போகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள மக்களுடன், பொதுபலசேனா, இராவணா பலய உள்ளிட்ட பௌத்த கடும்போக்கு அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த மதக் குருக்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்....

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் முரண்பட்டத் தகவல்களை வெளியிட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி நீதிமன்றில் எடுத்துரைத்துள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்த வலயத்தில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல்...

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...

ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனே தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க வந்ததாகவும், அவ்விளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சாட்சியம் ஒருவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் சந்தேகநபர் ஒருவர் அச்சுறுத்துவதாக மல்லாகம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக சட்டத்தரணி, சாட்சியம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்...

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள்...

தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசிமூலம் பிரதமர்...

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு...

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளி, அங்குள்ள பௌத்த துறவியொருவரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாத நேரத்தில் ஆலயத்தின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த பௌத்த துறவி, கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று...

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து, பிணையில் வௌிவரமுடியாத படி, விளக்கமறியலில் வைக்கும் வரை தான் காத்திருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ´எழுக தமிழ்´ நிகழ்வுக்கு முதல்வர் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு அரச சொத்துக்களை பயன்படுத்தியதாகவும்...

1998 ஆம் ஆண்டு 2 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் 05 இராணுவ வீர்ர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தியாகதீபம் திலீபனின் அஞ்சலி வணக்க நிகழ்வுகள் யாழ்ப்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தநிலையில் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...

எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது!! கூட்டமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! சுமந்திரன்
சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது எனவும், அதற்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், அதில் தாம் கலந்துகொள்ளவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சுமத்தினார். நாட்டில் தற்போது புதிய...

'எழுக தமிழ் 2016!' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள...

All posts loaded
No more posts