ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ; கூட்டமைப்பு வரவேற்பு

சர்வதேச பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை குறித்த அறிக்கை, ஏற்றுக்கொண்டிருந்தாலும், பல முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் முன்னேற்றங்களை எட்டத் தவறியுள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது....

பயங்கரவாதத் தடைச் சட்டம் கைவிடப்படும்!- ஜெனீவாவில் அரசாங்கம் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை செயப்படுத்துவதில்லையென இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பிலான ஆலோசனை வழங்கியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சின் செயலாளர் மனோ தித்தவெல்ல நேற்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிவிப்புச் செய்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்காது என மனித...
Ad Widget

கேப்பாப்பிலவு மக்களின் தொடரும் மண்மீட்பு போராட்டம்

கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கிறது. தமது பூர்வீக கிராமத்தில் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள 150இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், ராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்...

ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற...

யாழ்.வரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அனந்தி கோரிக்கை

யாழ்ப்பணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தை உற்சாகபடுத்தவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். ஐநா கூடியுள்ள இந்த நேரத்தில் சரணடைந்த...

புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி உதயமானது

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் என்ற பெயர் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கட்சியின் தலைவர் அன்பரசன் கூறினார். இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய...

11 தமிழ் மாணவர்கள் காணாமல் போன சம்பவம்; இரு கடற்படை வீரர்கள் கைது

2006 ம் ஆண்டில் பாடசாலை மாணவர்கள் சிலர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் 11 மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக...

மனித உரிமை ஆர்வலர்களின் பார்வை தம்மீது திரும்ப வேண்டும்: ஈழ அகதிகள் கோரிக்கை

இந்தோனேசியாவில் நீர்கூட அருந்தாமால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற ஈழத் தமிழர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப் பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலிய நோக்கி பயணித்த ஈழத் தமிழ் மக்கள் இந்தோனேசிய கடற் படையினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு இந்தோனேஷியாவில் அகதி...

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி மீண்டும் உறுதி

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

அரசாங்கம் பதில் வழங்கும்வரை போராடுவோம்

யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக பதில் வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று 8 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, தபால்மூல கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த வாள்வெட்டுக் கும்பல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைகழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களில் ஒருவர் தனக்கு தெரிந்த பல்கலைகழகம் சாராத வேறு சிலரை தமக்கு சார்பாக அழைத்துவந்துள்ளார். இதன்படி நேற்றையதினம் மாலை குறித்த பல்கலைகழக மாணவன் மது...

ஊர்காவற்துறை பெண் படுகொலை: சாட்சிக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல்

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான வாய் பேச முடியாத சிறுவனுக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஏழு மாத கர்ப்பிணியான 27 வயதையுடைய ஞானசேகரன் ஹம்சிகா எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான 12...

சொந்தக் காணிக்குள் நுழைந்த மக்களுடன் ராணுவம் முரண்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் சென்ற மக்களுடன் ராணுவம் முரண்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 84 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இன்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், பெரும்பாலான மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்...

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை: போராட்டம் தொடர்கிறது

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள்...

வடமாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக வடமாகாண வைத்தியர்கள் எதிர்வரும் 2 ம் திகதி வியாழக்கிழமை வடமாகாணத்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ...

ஊர்­கா­வற்­றுறை கர்ப்­பிணி பெண் படு­கொலை : ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட மர்ம மின்னஞ்சல்

ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற ஏழு மாத கர்ப்­பிணி பெண் மீதான படு­கொலை வழக்கு விசா­ர­ணையில் உண்­மை­யான குற்­ற­வாளி இவரே என ஒரு­வரை குறித்து அவர் தொடர்­பான தக­வல்கள் மின்னஞ்சல் மூலம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கு இனந்­தெ­ரி­யாத ஒரு­வரால் அனுப்­பப்­பட்­டமை தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்­டுள்ளார். கடந்த ஜன­வரி மாதம்...

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஹர்த்தால்

கேப்பாபிலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர். கேப்பாபிலவு தொடர்பாக கலந்துரையாடல், யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில்,தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் பொது அமைப்புக்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, வடகிழக்கு...

பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்: இலங்கை அரசு உறுதி

மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெறுவதற்கு நாம் ஜாதி, மத, இன பேதங்களின்றி...

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
Loading posts...

All posts loaded

No more posts