Ad Widget

தமிழ்க் கூட்­ட­மைப்பின் வவு­னியா தீர்­மா­னத்தை நிரா­க­ரிக்­கின்றோம்: சிறி­காந்தா

வவு­னி­யாவில் கடந்த சனிக்­கி­ழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கூட்டத்தில் போர்க்­குற்ற விசா­ரணை தொடர் பில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும் தீர்­மா­னத்தை தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் சார்­பிலும் அதன் செய­லாளர் நாயகம் என்ற அடிப்­ப­டை­யிலும் நிரா­க­ரிக்­கின்றோம் என தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லாளர் நாயகம் சிறி­காந்தா தெரி­வித்­துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வவு­னியா கூட்டம் தொடர்பில் கேட்­கப்­பட்ட போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமது கட்­சியைப் பொறுத்­த­மட்டில் கடந்த மாதம் 18 ஆம் திகதி வவு­னி­யாவில் நடை­பெற்ற எமது அதி­யுயர் பீட­மான தலைமைக் குழுக் கூட்­டத்தில் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்பில் அர­சாங்­கத்­திற்கு இனி­மேலும் கால அவ­கா­சத்தை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரி­மைகள் மன்றம் வழங்­கக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்தி ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதுதான் இப்­போதும் எமது கட்­சியின் நிலைப்­பா­டாகும்.

ஆனால் கடந்த சனிக்­கி­ழமை வுவ­னி­யாவில் நிகழ்ந்த கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்­கான கூட்­டத்தில் பலத்த வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு பின்னர் ஒரு சம­ரச முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­கின்­றது.

இந்த முடிவு சம்­பந்­த­மான தீர்­மா­னத்தை நோக்­கு­கின்ற போது அந்தத் தீர்­மானம் அர­சாங்­கத்தின் போர்க்­குற்ற விசா­ரணை தொடர்­பி­லான கால அவ­காச கோரிக்­கையை அனு­ச­ரிக்கும் விதத்­தி­லேயே அமைந்­துள்­ளது என்­பதை மிக மன வருத்­தத்­துடன் சுட்­டிக்­காட்­ட­வேண்­டி­யுள்­ளது.

போர்க்­குற்ற விசா­ரணை விவ­கா­ரத்தில் அர­சாங்கம் நேர்­மை­யாக செயற்­ப­ட­வில்லை. அந்த விசா­ர­ணையை இழுத்­த­டித்து மழுங்­க­டிக்கச் செய்யும் நோக்­கத்­துடன் அத­னு­டைய ஒவ்­வொரு நட­வ­டிக்­கையும் நகர்வும் அமைந்­துள்­ளன. இந்தச் சூழ்­நி­லையில் தான் அர­சாங்­கத்தின் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு கால அவ­காசம் கோரு­கின்ற நிலைப்­பாட்­டினை ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் மன்றம் நிரா­க­ரிக்க வேண்டும் என்­பதை தமிழர் தரப்பில் பல்­வேறு அர­சியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுஅமைப்புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். எமது கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. இந்த விடயத்தில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை எனத் தெரிவித்தார்.

Related Posts