- Sunday
- August 24th, 2025

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடும் நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் செனட் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயத்தைத்...

வவுனியாவில் காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட...

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வலிகாகமம் வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகள்...

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...

வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார். வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னாள் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. பல சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிப்பதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதும்,...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியாதான் என்று முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் ஆங்கில ஏட்டுக்கு கோத்தபாய ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா...

காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகியுள்ள நிலையில் தாம் இனியும் ஏமாற தயாரில்லை என்று மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற...

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில்...

சுமந்திரனுக்கு எதிராகக் கொலை அச்சுறுத்தல் நிலவுகின்றமையை எங்களுடன் தொடர்புபடுத்திச் சம்பந்தன் தன்னுடைய பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று ஆற்றிய உரை தொடர்பாகப்...

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச...

“முழந்தாழில் இருத்தி, இரு கைகளையும் கால்களுடன் இணைத்துக் கட்டி, இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தூக்கி, உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை” என, யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞனை, பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகள்,...

வடக்கில் படையினர் வசம் காணப்படுகின்ற பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் கரையோரப் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதும் முக்கியமானதாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறுபான்மை மக்கள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் றீட்டா...

இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவற்றைத் தாரைவார்ப்பதற்கான திட்டமொன்று இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது தொடர்பிலான உண்மை விபரங்கள் வெளிப்படுத்தப்பட...

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் ஆதரவு...

தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவது கட்டாயமென கேட்டுக்கொண்டார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காதென சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனியாவது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தேசிய...

வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்பில் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அண்மையில் புத்தர் சிலை மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள குழுவொன்றைச் சார்ந்தவர்களே செயற்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறான சூத்திரதாரிகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்...

All posts loaded
No more posts