தமிழ் மக்களுக்கான சிறந்த தொரு அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் கூட்டமைப்பு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லையென முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கான கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றியிருந்தால் தனது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற ஒரு அரசியல் கட்சி உருவாகியிருக்க தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் அலுவலகம் மட்டக்களப்பு – கல்லடியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கருணா அம்மான் அரசியல் கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு அந்த கட்சி உறுப்பினர்கள் தயக்கம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.