ஐ.நா தீர்மானத்தின் உள்ளடங்களை நிறைவேற்ற மாட்டோம் என வெளிப்படையாக கூறும் அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழக்கும் நடவடிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ் ஊடக மையத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சிவில் சமூக ஊடக அமையத்தின் பேச்சாளரும் யாழ் சட்டத்துறை விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் சமாதானம் அல்லது நீதியில் ஒன்றை தெரிவுசெய்துகொள்ள வேண்டும் என்ற பொருத்தமற்ற கேள்வியை திணிப்பதற்கே ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அதற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு வழங்குகின்றனவா என்ற சந்தேகம் தோன்றியுள்ளமை கவலைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.