- Monday
- December 29th, 2025
சோமலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் உள்ளதாக நம்பப்படும் இலங்கையர்கள் குறித்த விபரம் வௌியாகியுள்ளது. தலைமை அதிகாரி - மதுகமவைச் சேர்ந்த ருவன் சம்பத் தலைமை பொறியியலாளர் - ஹொரண பகுதியைச் சேர்ந்த ஜே.களுபோவில மாலுமி - மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.நிகோலஸ் மூன்றாவது அதிகாரி - காலியைச் சேர்ந்த திலிப் ரணவீர மூன்றாவது பொறியியலாளர்...
வவுனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர் பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் அதன் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையிலும் நிராகரிக்கின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கூட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட போதே...
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த 3 பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த இவர்களிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது....
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு, கடற்படை மற்றும் விமான படையினருடன் இணைந்து இன்று விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை...
ஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்றயதினம் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அமைப்புக்கள் வருகை தந்திருந்தன. இந்நிலையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமாரிடம் ஊடகவியலாளர்களால் தொடுக்கப்பட்ட...
கணவன், மனைவி மீது கோடாரியால் வெட்டியதால் மனைவி யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. யாழ். கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். யாழ். திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் வைத்து மனைவி...
மாலபே சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கொழும்பில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவுடன், லோட்டஸ் வீதிக்கு அருகில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். அதுமாத்திரமின்றி நீதிமன்ற தடையுத்தரவையும் மாணவர்களிடம் காண்பித்துள்ளனர். எனினும் நீதிமன்ற...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. குறித்த வழக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் நேற்று (திங்கட்கிழமை) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் உடல் கூற்று பரிசோதனையின் போது தலைமுடி உள்ளிட்ட தடய பொருட்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு திங்கட்கிழமை நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை காணி உரிமையாளர்கள் இருவரினால் ஆரம்பிக்கப்பட்ட நீராகாரமின்றிய சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர்...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ஜெனிவா கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அங்கு சென்று இரகசியமாக ஒத்துக் கொண்ட தீர்மானத்தை, ஐனநாயகத் தீர்மானமாக மக்கள் மத்தியில் காட்டுவதற்கான நாடகமாகத் தான், வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் அமைந்துள்ளது” என, குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, இந்த நாடகத்தை முதலமைச்சரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருப்பதாக கூட்டிக்காட்டியுள்ளது. சம்மந்தன், சுமந்திரன்...
பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த காலநிலை ஏப்ரல் மாதம் வரையில் தொடரவுள்ளது. எனவே பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை மற்றும் இடியுடன்கூடிய மழை பெய்யவுள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலேயே அதிகளான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது....
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளைய தினம் காலை 10 மணிக்கு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரியும், பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சமவுரிமை மக்கள் இயக்கத்தால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்.ஊடக மையத்தில்...
மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே...
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை கடந்த எட்டு வருட காலமாக கையளிக்க முடியாத இந்த அரசாங்கம், இன்னும் இரண்டு வருட காலத்தில் எதனை சாதிக்கப்போகின்றது என்ற நம்பிக்கையில் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியவில்லையென காணாமல் போனோரின் உறவுகள் அங்காலாய்க்கின்றனர். காணாமல் போன தமது உறவுகளை கையளிக்குமாறு கோரி...
கடந்த 20 வருடங்களாக வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சாவடியாக காணப்பட்ட வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை, அதன் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாளப்படுத்தினர். 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியை அபகரித்து இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ்...
ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு...
பலாலி விமான நிலையத்திற்காக அரசினால் 1952 மற்றும் 1983 ஆகிய காலப்பகுதிகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 956 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களையும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களிடம் பதியுமாறும் கோரப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ முகாமிற்காக 1952 மற்றும் 1983ம் ஆண்டுகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களிற்கான நட்ட ஈடு இன்றுவரை அரசினால்...
“கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். ‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறோம். 'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு,...
Loading posts...
All posts loaded
No more posts
