- Saturday
- August 8th, 2026
கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினர் வசமிருந்த காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் நேற்றயதினம் மக்கள் முன்னிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. காணி கையளிக்கும் நிகழ்வு கேப்பாப்புலவுவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இன்று காலை நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம்...
கேப்பாப்புலவில், இலங்கை ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டது. காணிகள் விடுக்கப்பட்ட போதிலும், காணி அளவீடுகளின் பின்னரே மக்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில், இலங்கைப் படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை...
யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் தொற்றியுள்ள இனங்காணப்படாத ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்கவின் பணிப்புறைக்கு அமைய குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தற்போதைய நிலையில் இந்த பரிசோதனையின் பொருட்டு வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்று வடமாகாணத்திற்கு சென்றுள்ளது....
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் இவ்வாறு பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கு முற்பகல் 10 மணியளவில் அனுப்பி...
கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன? பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள்...
“பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட போதும் உங்களைப் போன்ற தலைவர்களை நேரடியாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே வந்தேன்” என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனை பார்க்க சென்றபோது மஹிந்த உரையாடிய விடயங்களை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர அரசியலில்...
மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார். தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்....
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்துவருகின்றனர் என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறந்த நீதியரசராக இருந்தபோதும் அரசியல்வாதியாகத்...
தேரரின் தகனக்கிரியைக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வி. நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்க மறுப்பு!
யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதின் உடலை தகனம் செய்வதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் - ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்.முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் 12 சட்டத்தரணிகள்...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில்...
அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கான தடை நீக்கம் என்பதன் மூலம் நாட்டில் சுகாதாரம் தொடர்பான அவதானம் இல்லாது போய்விட்டதா? அல்லது வெளிநாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தவறான கொள்கையா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்பற்றோஸ் கூரைத்தகடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு தீர்மானித்துள்ள விடயம் தொடர்பாக நேற்று...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக இவ் உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுபணத்தை...
சிறந்த நீதியரசரான வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைந்துவிட்டதாக சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியையே சரியான முறையில் முழுமையாக பயன்படுத்தாத முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மலேஷியா வழங்கும் நிதியை என்ன செய்வார் என்று புரியவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவி வரும் ஒரு வகை மர்மக் காய்ச்சல் தொடர்பில் ஆராய விஷேட வைத்தியக் குழு ஆய்வுகளை நடாத்தியுள்ள போதும் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த விஷேட வைத்திய குழு கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த குழுவினர்...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன எனவும், அவர்களின் ஆதரவுடனேயே வித்தியைக் களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன. தமிழர்...
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதியில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், 300 நாட்களை கடந்துள்ளன. இந்நிலையில், இலங்கை...
முல்லைத்தீவில் பரவி வரும் ஒருவகை காய்ச்சலால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்குள் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இக்காய்ச்சல் தொடர்பில் தீவிர ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல,...
இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது. இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்...
பெற்றோலிய ஊழியர்கள் சங்கமானது மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய சங்கத்தின் இணைப்பாளர் பீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளதாகவும், இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த...
Loading posts...
All posts loaded
No more posts
