யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவுசெலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சகல மக்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் வரவு, செலவுத் திட்டத்தை இம்முறை தயாரித்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள இந்த வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியிருப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் மேலும் கூறினார்.
இதேவேளை, தமிழ் மக்கள் உட்பட சகல தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு,செலவுத் திட்டம் அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.