Ad Widget

யாழில் அடை மழை, ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை இரண்டாயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களும், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறையில் 40 குடும்பங்களை சேர்ந்த 137 பேரும், யாழ்.பிரதேச செயலாளர் பிரிவில் 209 பேரும், நல்லூரில் 552 பேரும்,கோப்பாயில் 893 பேரும் மழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் சங்கானையில் 66 பேரும், சண்டிலிபாயில் 444 பேரும், சாவகச்சேரியில் 759 பேரும், தெல்லிப்பழையில் 253 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பருத்தித்துறையில் 45 பேரும், மருதங்கேணியில் 2 ஆயிரத்து 382 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதற்கும் மேலதிகமாக நான்கு வீடுகள் முழுமையாகவும், 159 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Related Posts