- Saturday
- August 8th, 2026
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...
தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17.01.2018) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் வெளியிட்டுவைக்கப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு உரைகளையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளளுமான சட்டத்தரணி மணிவண்ணன் ஆகியோர் தமிழ்த்தேசிய பேரவையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை...
”தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அரசாங்கம் தருவதனை பெற்றுக்கொள்ள முடியாது. எமக்கு விருப்பமில்லாத தீர்வினை எம்மீது திணிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் இன்னும் 20 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கை சேராதவர்கள் வடக்கு கிழக்கை ஆட்சிசெய்ய, அவர்களின் கீழ் நாம் வாழும் நிலை ஏற்படும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்...
அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைக்கால அறிக்கையில் இல்லாத விடயங்கள் கூட மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் இடைக்கால அறிக்கையினை முழுமையாக வாசிக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவ்வாறு பொய்ப்பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள்...
யாழில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது...
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு தேசத் துரோகி எனத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு மண்ணை அள்ளித் தூற்றியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் கையளித்தும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 324 ஆவது நாளை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தது. இது கடுமையான வாதப்பிரதி வாதங்களை தோற்று...
யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்றயதினம் (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார். இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும்,...
ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதன்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால்...
யாழில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் தமிழீழ புரட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புரட்சி பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன. இதேவேளை, புத்தாண்டு வாழ்த்துக்களை விடுதலைப்புலிகள் அமைப்பின் தேசியத்...
பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நாகராசா பகிரதன் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல்வீட்டு குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் அயல்வீட்டு பெண்ணை வேட்பாளர் தாக்கியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்திருந்த...
டான் ரீவி அலுவலகத்தினுள் புகுந்த நபரால் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டணம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. டான் ரீவி அலுவலகத்திற்குள் புகுந்து அதன் செய்தியாசிரியர் தயா மாஸ்டர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது....
தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், ‘ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என குறிப்பிட்டார். இவ்வாறு குறிப்பிட்டமை, ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததென, சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிக்கையொன்றின்...
கிளிநொச்சி மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கொக்காவில் பகுதியில், தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சம்பவ இடத்திலேயே...
கிளிநொச்சி பளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அதாவது 08.01.2018 இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இச்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தினத்திற்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டமையினால் தாம் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுவதினை கண்டித்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாடுகளால் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் அதிருப்தி கொண்டுள்ளது. இதனால் இனிவரும் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. “யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தால் முன்மொழியப்பட்ட வர்த்தகர்களின் பெயர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்பு மனுவில் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் தமிழ்...
இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என வடமாகாண முதலமைச்சரிடம் முறையிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களுக்கு நியமனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் வழங்கும் போது பரீட்சையில் பெற்ற புள்ளி ஒழுங்கில் தெரிவு வழங்கப்படல் வேண்டும் என்பது நடைமுறை விதி கோவை இல...
பிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்தமை யால் மரணத்தை தழுவியிருக்கலாம். ஆனால், மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் அவருக்கு என்றும் இருந்ததில்லையென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார். புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர்...
இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தின் பின்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உந்துதலாக உள்ளார்களா எனும் கேள்விக்கு பணிப் பகிஷ்கரிப்பை நடத்திவரும் தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண...
Loading posts...
All posts loaded
No more posts
