Ad Widget

ததேகூவில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

கூட்டமைப்பின் முக்கிய பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைகள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஈபிஆர்எல் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பிலும், அண்மையில் வட மாகாண அமைச்சரான பீ.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக, கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, டெலோ கட்சியின் செயலாளர் எஸ்.ஶ்ரீகாந்தா, பிளட் அமைப்பினர், ஈபிஆர்எல்எப் கட்சியின் பிரதித் தலைவர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டம் மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாமிப்பில்லை தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts