- Tuesday
- May 13th, 2025

தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பறிப்பதில் மகிந்த ராஜபக்சா அவர்களின் தலைமையில் இருந்த கடந்த அரசாங்கத்துக்கும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை நடப்பு அரசாங்கம் சட்டத்தால் பறிக்க முயல்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இரணைமடு பாரிய...

வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது...

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்குப் பலரும் இயற்கையையே குற்றம் சாட்டிவருகிறார்கள். இயற்கை வஞ்சித்துவிட்டது என்றும் இயற்கையின் கொடூரம் என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள். உண்மையில் வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும்...

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள்...

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது. இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்...

நெடுந்தீவில் பனைவிதைகளை நடுகை செய்து பராமரிக்கும் கற்பக கானகத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை (12.01.2017) நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வைத்துள்ளார். கனடாவில் உள்ள நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் 2013ஆம் ஆண்டில் இருந்து நெடுந்தீவில் பாடசாலை மாணவர்கள் மூலம்...

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பசிப்பிணிபோக்கும் மருத்துவனாக மிகப்பெரும் மனிதாபிமானப் பணியை உலக உணவுத் திட்டம் ஆற்றி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகணத்தில் 964 பாடசாலைகளில், தரம் 1 தொடக்கம் 9வரை கல்விபயிலும் 1,60,000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை குறைந்த ஒரு தொகையல்ல் இது வடக்கு...

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் அலுவலகத்தில் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது.

பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல் உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் குழந்தைகள்போல நாங்கள் நடந்து கொள்வதில்லை. பூமியில் நாங்கள் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவுதான் இயற்கைப்பேரழிவுகள் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு...

வடமாகாணத்தில் கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக காங்கேசன்துறை பகுதியே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்புக்களை மேற்கொண்ட பொலிஸாருக்கும் அதிகளவான குற்றங்களை கட்டுபடுத்த உதவிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்...

#Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2016 ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம் திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் Startup Weekend Jaffna ஆக நடாத்தப்பட்டது. இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது இதுவே...

தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து மீளாத்துயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து...

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், ஈழத்தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் கடந்த 01.12.2016 அன்று இயற்கை எய்தினார். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரையிலும் ஒரு கவிதைப் போராளியாகவும், களப்போராளியாகவும் பணியாற்றி வந்த அவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 12.12.2016 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3.00...

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு அன்பே சிவம் அமைப்பு மரக்கன்றுகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, செவ்வாய்க்கிழமை (29.11.2016) இளவாலை கன்னியர்மட மாகாவித்தியாலயத்தில் தென்னந் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக 100 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அன்பே சிவம் அமைப்பு சுவிற்சர்லாந்தில் சூரிச் சிவன் ஆலயத்தின் நிதியூட்டலில் இயங்கிவரும் ஒரு சமூகத் தொண்டு நிறுவனம் ஆகும்....

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நவீன விதை சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்துக்கென 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம்...

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவில் இயங்கி வரும் புங்கையின் புதிய ஒளி என்னும் இளைஞர் அமைப்பால் புங்குடுதீவில் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (15.11.2016) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு முதல் பனம் விதையை நாட்டி, நடுகையைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புங்குடுதீவுப் பாடசாலைகளைச்...

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) கால்நடை மருத்துவ நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடைகளைச் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்...

மரநடுகை மாதத்தை முன்னிட்டு மன்னாரில் 1000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11.11.2016) நடைபெற்ற மரநடுகை மாத நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார். வடமாகாணசபை கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து கார்த்திகை...

ஸ்ரீலங்கா அரசினால் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில...

வடமாகாணசபையால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று சனிக்கிழமை (05.11.2016) ஆரம்பமாகியுள்ளது. மரநடுகை மாதத்தை முன்னிட்டு பொதுமக்களும் சமூக அமைப்புகளும் மரநடுகையில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இவர்கள் தங்களுக்குத் தேவையான தரமான மரக்கன்றுகளைப் பெறும் நோக்கிலும் உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களுக்கான சந்தை...

All posts loaded
No more posts