Ad Widget

மரநடுகை மாதத்தை முன்னிட்டு மன்னாரில் 1000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள்

மரநடுகை மாதத்தை முன்னிட்டு மன்னாரில் 1000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11.11.2016) நடைபெற்ற மரநடுகை மாத நிகழ்ச்சியில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார்.

01

வடமாகாணசபை கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடித்து வருகிறது. இவ்வருட மரநடுகை மாதம் சொந்த மண் சொந்த மரங்கள் என்ற கருப்பொருளுடன் வடக்கு மாகாணம் பூராவும் திணைக்களங்களினாலும், பொது அமைப்புகளினாலும் உணர்வு பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டே விவசாயத் திணைக்களத்தின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து, மன்னாரின் 16 விவசாயப் போதனாசிரியர்கள் பிரிவுகளிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1000 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் தென்னை, நெல்லி, கொய்யா, தேசி, மாதுளை, பலா, முருங்கை, ஜம்புநாவல், சண்டி, விளா ஆகிய 10 மரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

08

மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வடக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் யோகராஜா கமலேஸ்வரி ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

05

மேலும் படங்களுக்கு..

Related Posts