- Tuesday
- May 13th, 2025

மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு உணர்வுபூர்வமான செயற்பாடாகவும் உள்ளது. அந்தவகையில், மண்ணுக்காக மரணித்த எமது உறவுகள் அத்தனைபேரையும் நாம் கூட்டாக நினைவு கொள்ளும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை என்று...

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இலக்காகி உயிரிழந்த, யாழ். பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்ஸனின் இறுதிச்சடங்கு, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு, மாணவனுக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் உரையையடுத்து, மாணவனின் பூதவுடல், உடுவில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடங்கி 30 வரையான நாட்கள் தேசிய பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மின்சாதனக் கழிவு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கழிவு ஒழிப்பு வாரத்தின் யாழ் மாவட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (24.10.2016) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர்...

வடக்கை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு நிகராக எமது பாரம்பரிய உணவுகளும் பங்களிக்க முடியும். வடக்கின் பாரம்பரிய உணவுகள் பண்பாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (22.10.2016)...

நாங்கள் எவ்வாறு இந்த மண்ணின் சொந்தக்காரர்களோ, அதேபோன்று இந்த மண்ணுக்கே உரித்தான கால்நடைகளும் உள்ளன. கலப்பு இனங்களின் வருகையோடு நாட்டுப் பசுக்கள், நாட்டு ஆடுகள், நாட்டு நாய்கள் மீதான அக்கறை குறைந்துபோக, அவை இன்று கவனிப்பார் இல்லாமல் தெருவோர விலங்குகளாக அலைந்து கொண்டிருக்கின்றன. கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை எமது மண்ணின் இயற்கைச் சொத்தான இவற்றின்...

கடந்த விஜயதசமி நன்னாளில் மானிடம் அறக்கட்டளையும் தெல்லிப்பளை தாய்மார் கழக இணையமும் இணைந்து தெல்லிப்பளை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்துள்ளன இதனை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் ஐயா திறந்து வைத்தார். முற்றிலும் தாய்மார்களால் நடாத்தப்பட இருக்கின்ற இவ் உணவகம் இயற்கையான பழப் பானம் மோர் இலைக்கஞ்சி கூழ் குரக்கன்...

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்-மத்திய மின்சக்தி அமைச்சரிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய...

துளி நீரேனும் அருந்தாது உயிர்க்கொடை புரிந்த தியாகி திலீபனின் 29ஆவது நினைவு தினமான நேற்று திங்கட்கிழமை (26.09.2016) மாலை 6மணிக்கு நல்லூரில் அவரது இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி அருகே நினைவுத் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா. கஜதீபன் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும்...

வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் பயன் பெறும் விதமாகக் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2016) நடைபெற்றுள்ளது. உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடை...

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23.09.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்துள்ளார். விவசாயத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை...

வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கி...

தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்...

சாரணர்களின் பாசறை நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஏராளமான விடயங்களை இளவயதிலேயே கற்றுத்தருகின்றன. பாடசாலையை விட்டு வெளியே இயற்கைச் சூழலில் நடாத்தப்படும் பாசறைகள் மாணவர்களிடையே இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறது என்று வடக்கு சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் இந்துக்கல்லூரியின் சாரணர் நூற்றாண்டு விழாவையொட்டி யாழ் இந்துக்கல்லூரியின் திரிசாரணர்களால் வவுனிக்குளம்...

வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, 'பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை. பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான எந்தவித சான்றாதாரங்களும் இல்லை' என்று...

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (06.09.2016) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள்...

விவசாயப் போதனாசிரியர்கள் தங்களைப் பயிர் மருத்துவர்களாகத் தரம் உயர்த்த வேண்டும். அதன்மூலம் விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை மேற்கொள்ள முடியும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 விவசாயப் போதனாசிரியர்களுக்கு மின்- பயிர்ச்சிகிச்சைப் பயிற்சியை வழங்கும் செயலமர்வு இன்று திங்கட்கிழமை (05.09.2016) திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்தில்...

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (03.09.2016) விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் ரூபா பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கான வாழ்வாதார உதவிகள்,...

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ முன் அவர்களது யாழ் வருயை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் யாழ் பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும் ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பானீகீனின் பிரதிநிதி ஒருவர்...

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ் நூலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை இன்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடிய சுமார் பல நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவுகள் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில்...

All posts loaded
No more posts