- Tuesday
- May 13th, 2025

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீன்பிடித்துறை அபிவிருத்தி தொடர்பாகக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, திட்ட முகாமையாளர் நா.புகேந்திரன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட முகாமைத்துவ...

போருக்குப் பின்னரான இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே குற்றச் செயல்கள் மலிந்து வருகின்றன. பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட சாரணியர் சங்கத்தின் நூறாண்டு நிறைவையொட்டி கனடாவில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையின் அறிமுக நிகழ்ச்சி இன்று...

கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழில் ஆரம்பித்து வைத்தார். வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 'சூழலியல் விவசாயத்தை நோக்கி' என்னும் விவசாயக் கண்காட்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22.08.2016) ஆரம்பமாகியுள்ளது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இக்கண்காட்சியை வடக்கு கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தொடக்கி வைத்துள்ளார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும்...

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைப் பரிகரிப்பதற்குரிய நிலையத்துக்கான அடிக்கல் காக்கைதீவில் நேற்று திங்கட்கிழமை (22.08.2016) நாட்டப்பட்டுள்ளது. ரூபா 18.5 மில்லியன் செலவில் அமையவுள்ள இக்கழிவுநீர் பரிகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக நாட்டி வைத்துள்ளார். யாழ் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில்...

யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (16.08.2016) தலைமன்னார் - மதவாச்சி புகையிரதப் பாதையில் மெனிக்ஃபார்ம் அருகே புகையிரதம் மோதியதில் நான்கு யானைகள் உயிரிழந்தன. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்...

மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட...

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத்...

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வு பூர்வமாக...

பொருளாதார மற்றும் வர்த்தக விஞ்ஞான மாணவர்களின் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (12.08.2016) யாழ்ப்பாணத்தில் மரநடுகை செய்துள்ளனர். திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மரக்கன்றுகளை நடுகை செய்துள்ளனர். பல்வேறு நாடுகளையும் சேர்ந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ஐசெக் (AIESEC) எனப்படும் இவ்வமைப்பு அரச சார்பற்ற மற்றும்...

யாழ் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் மழை நீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு முதல்வர், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்...

பாற்பண்ணையாளர்களுக்கான வயல் விழா யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று வியாழக்கிழமை (11.08.2016) நடைபெற்றது. பண்டத்தரிப்பில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யு.எஸ்.எயிட் நிறுவனம் பாற்பண்ணையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கிவருகிறது. குறிப்பாக, பசுக்களில் பால் சுரப்பைப் போசாக்கான உணவின்மூலம் அதிகரிக்கும்...

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள். முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர். இன்று விரதமிருந்து கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில்...

நாங்கள் மீண்டும் வருவோம். விட்டுச் செல்வதற்காக அல்ல எடுத்து செல்வதற்காக மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். பாதயாத்திரை என்றால் என்ன, எதிர்க் கட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும். போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து முடிக்க வேண்டும் என இவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தயாராக உள்ளோம். நீங்கள் தயார் என்றால்...

வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விசனம் தெரிவித்துள்ளார். வடமாகாண பனை அபிவிருத்தி வார இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை (28.07.2016) பனை அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ்...

தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வியாழக்கிழமை (27.07.2016) தொடங்கி வைத்துள்ளார். தொண்டைமானாறு உவர்நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள்...

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை (22.07.2016) ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துள்ளார். வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுடன் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு...

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திருமுறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச் சுவடிகள் வழியாகவே எங்களிடம் கையளிக்கப்பட்டன. தமிழை வளர்த்தது பனை. பனை இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்களும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த...

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் நேற்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர். போரின் காரணமாகச் செயற்பாடுகள் அற்றிருந்த விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டில் இருந்து மீளவும்...

All posts loaded
No more posts