- Tuesday
- May 13th, 2025

நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பெருக்குமரம் அரேபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கையில் எஞ்சியிருக்கும் 40 வரையான மரங்களில் நெடுந்தீவில் உள்ள பெருக்குமரமும்...

வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை...

வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் நேற்று வியாழக்கிழமை (14.07.2016) குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது. இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன. இவற்றோடு, நில அளவைத் திணைக்களம், தொழில்...

நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங்குகின்றன. அத்தோடு, நாட்டின், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் சர்வதேச கூட்டுறவு தினவிழா நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) கொண்டாடப்பட்டது. புத்தூரில் அமைந்துள்ள சங்க...

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது. இதன் போது பொம்மைவெளி அபூபக்கர் பிரதான இமாம் எம்.பரூஸ் தொழுகையை மேற்கொண்டார். இதன்போது பெருந்திரளான...

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது நடைபெற்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலய அதிபர்...

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது. இந்த பேரணியில் மாணவர்கள், பொது...

வலிகாமம் வடக்கு பகுதிகளிலுள்ள தங்களுடைய காணிகளை விடுவிக்க கோரி, மக்கள் இன்று நடைபவனியொன்றை மேற்கொண்டுள்ளனர். மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் நல்லூர் ஆலய முன்றலில் கூடி, அங்கிருந்து யாழ். நகரிலுள்ள ஐ.நா அலுவலகம் வரை நடைபவனியை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் நல்லூர் ஆலயத்தில் கூடிய...

இந்திய நிதியுதவியுடன் புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டாக இணைந்து திறந்துவைத்துள்ளனர். யாழ். நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்ட குறித்த மைதானம் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக விளையாட்டு ஆர்வலர்களின் பயன்பாட்டிற்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த...

இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில்...

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மை காலங்களில் வடக்கு...

வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வருடத்தில் இருந்து மே 30...

ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்றும் அனுஸ்டிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத மிகவும்...

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சல் தலை நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2016) இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமரர் வி.வீரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்....

நெடுந்தீவு ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டில் குமுதினி படுகொலை நினைவாக அண்மையில் நெடுந்தீவில் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த குமுதினி படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது 31ஆவது ஆண்டு நினைவையொட்டி...

தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றவுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பர் என்பதுடன் அவரது தீவிர ரசிகர்...

இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தும் மக்கள் வெளியேறவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை...

சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...

பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாகக் குடிபெயர்கின்றன. குளிர்விலகும்போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றன. வலசை போகும் இந்தப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்...

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 4,200 ஹெக்டயர் பரப்பளவில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (12.05.2016) விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும்...

All posts loaded
No more posts