Ad Widget

பான்கீமூனின் பிரதிநிதியிடம் மகஜர் கையளிப்பு

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ முன் அவர்களது யாழ் வருயை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்பு போராட்டம் யாழ் பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது.

ban visit-7

பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும் ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பானீகீனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த குறித்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின்விடுதலைக்கான அமைப்புக்கள், அரசியல் தீர்வை வலியுறுத்தி செயற்படும் அமைப்புக்களும் மகஜர்களை சமர்பித்திருந்தனர்.

மயிலிட்டியில், பலாலியில், முள்ளிவாய்க்கால் கிழக்கில், கேப்பாபிலவில், சம்பூரில்உடன் மீளக் குடியேற்ற வேண்டும்,
அரசியல் கைதிகள் அனைத்தும் உடன் விடுவிக்கப்படல் வேண்டும், காணாமல் போனோருக்கு உடன் பதில் வேண்டும்.
தமிழ்த் தேசத்தின் கட்டமைப்புசார் இன அழிப்பை தடுக்க தமிழத் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வு வேண்டும். இராணுவம் வெளியேற வேண்டும், இன அழிப்பு போர்க்குற்றங்களுக்கு சர்வதேச பக்கச்சர்பற்ற விசாரணை வேண்டும். போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பான்கீமூனின் பிரதிநிதியிடம் நேற்று பொது நூலகத்தின் முன்பாக போராட்டத்தில்ஈடுபட்ட மக்கள்கையளித்த மகயர்களில் ஒன்றின் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பிரதியை பார்வையீடுவதற்கு அழுத்தவும்.

மேலும் படங்களுக்கு..

Related Posts