- Wednesday
- March 11th, 2026
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய...
2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என புவனேந்திரராசா இராசேஸ்வரி என்ற குடும்பத் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரின் அறிவிப்புக்கேற்ப சரணடைந்த தனது கணவனை மனநோயாளியாக்கி காணாமல் போகச் செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி – கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான அருணாச்சலம்...
“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். “இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில்...
முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். முத்தையன்கட்டுக் குளத்தின்கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவை 6000...
அக்காவுக்கு ஏதாவது நடந்தால் குண்டுவைக்கவும் தயங்கமாட்டேன் என கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார் என கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுப்பது தொடா்பாக உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு விபரங்கள் அனுப்ப வேண்டியிருப்பதனால் வாகனங்களை பாவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்திடம் வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதி பத்திரம் தேவையான மாற்றுத்திறனாளிகள் முதலில் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி உதயநகா்...
கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் புதன்கிழமை (28) மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் சென்ற வேளை சில இளைஞர்கள் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர். இவ்விடயம் சிறுவர்...
யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்திற்கும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தின்படி, 42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இதன்பிரகாரம்...
முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்று புதன்கிழமை காலை (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த...
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில்...
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இந்திய நாட்டின் அகிம்சாவாதியான மகாத்மா காந்திக்கான நினைவுச்சிலை அமைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் காலையில் அந்தச் சிலை உடைந்துவிழுந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் முல்லைத்தீவு...
எமது சமுதாயத்தின் இருப்பை பாதுகாத்து தக்கவைக்கும் பாரிய பொறுப்பு இளைஞர் யுவதிகளிடமே உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து வெளிநாட்டு மோகம் காரணமாக வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பதானது, எதற்காக போராடினோம் என்ற கேள்வியை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய சனசமூக...
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று 25-12-2016 நத்தார் தினத்தில் முதியவர்களுக்கு பொதிகள் வழங்ப்படுவதாக அறிவித்து அந்த கிராமத்தில் வாழ்கின்ற 136 முதியவர்களை அங்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். காலை பத்து மணிக்கு குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இயலாத நிலையிலும் பொது நோக்கு மண்டபத்தில் ஒன்று கூடியுள்ளனர். கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளியில்...
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இயற்கைப் பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சி இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. செம்மலை மகா வித்தியாலயத்தில் நாளை திங்கட்கிழமை (26.12.2016) பி.பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொள்ள உள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற...
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்...
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி புதுக்குடியிருப்பு கடலில் சிதைவடைந்த விமானத்தின் உதிரி பாகங்கள் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த சிதைவடைந்த உதிரிப்பாகங்கள் ரஷ்ய போர் விமானத்தின் உதிரிப்பாகங்களாக இருக்கலாமென்று நம்பப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை புதுக்குடிருப்பு கடலில் 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்த பாகங்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தன. இதுதொடர்பாக மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக இவற்றை...
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது என உறவினா்கள் தெரிவிக்கின்றனா். தனக்குதானே தீ மூட்டியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கனகாம்பிகைகுளத்தைச் சோ்ந்த கிருஸ்ணகுமாா் வானுஜா வயது 17...
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் நேற்று 20-12-2016 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அறிவியல்நகாில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஏற்கனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
