- Friday
- November 21st, 2025
Techstar அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend நிகழ்வு, இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், இவ்வாண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை யாழ்.ரில்கோ விடுதியில் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரண்டாவது நிகழ்வு, இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அடுத்த 3வது நிகழ்வான...
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும்...
ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அச்சம் வெளியிட்டுள்ளார். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக...
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அபகரிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்கள் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அண்மைக்காலமாக கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். இதற்குரிய காணியை முல்லைத்தீவு மாவட்ட...
கடந்த கால யுத்தம் காரணமாகவே பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியிருந்ததாகவும் எனினும், யுத்தம் நிறைவடைந்த நிலையில் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். பொதுமக்களுக்கும் ஆளுநருக்குமிடையில் நேற்றையதினம் (09) முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2009 ஆண்டுக்குப் பின்னர் கொக்குத்தொடுவாய் முகத்துவாரம்...
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காணிப்பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு நேற்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் விசாரணையொன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் 125 காணிப்பிணக்குகள் வடக்கு மாகாண ஆளுநரால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன்போது வடமாகாண ஆளுனர், ஆளுனர் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட...
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட 42 குடும்பங்களின் காணிகளுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட மாற்றுக் காணிகளை தாம் வாங்கப்போவதில்லையென அக்குடும்பங்கள் தெரிவித்துள்ளனர். தம்மால் கையகப்படுத்தப்பட்ட 59 குடும்பங்களின் காணிகளை விடுவிப்பதாகவும் ஏனைய 42 குடும்பங்களுக்குரிய காணிகளை தாம் வழங்கப்போவதில்லையென இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு...
மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மாலை 5 மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் வீதிகடமையில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி...
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் மூழ்கி 17 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளான சிறுமிகள் இருவர், நேற்று (07) மாலை உயிரிழந்துள்ளனர். 17 வயதுடைய சிறுமிக்குக் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. குறித்த சிறுமி, சிறுமியின் கணவர் மற்றும் சிறுமியின் சகோதரி, மற்றொருவர் என நால்வர் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளனர். அங்கு...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பொதுச்சந்தை பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் சந்தை ஒன்றை பிரதேச சபை அமைக்கும் பணியில் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டகங்கள்கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் பிரதேச சபையினரின்...
கிளிநொச்சியில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 07-12-2016 புதன் கிழமை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். காலை ஒன்பது மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லீம் மாணவிகளுக்கு ஃபர்தா அணியக் கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர்கள் ஏனைய அதிகாரிகள் பணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது. பரீட்சை மத்திய நிலையமாக செயற்படும் தண்ணீற்று முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளே இந்த நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்தாவை அகற்ற மறுத்தால் சுட்டெண்களை பரீட்சை...
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிரம்படிக் கிராமத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தித்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2009 ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு அங்கிருந்து அழைத்து வரப்பட்டனர். எனினும் இவ்வாறு அழைத்து வரப்பட்ட கேப்பாப்புலவு மக்கள், அவர்களது சொற்த இடங்களில் குடியமர்த்தப்படாது...
நாட்டில் காணப்பட்ட புரிந்துணர்வின்மையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருந்ததென குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தற்போதைய தேசிய அரசாங்கத்திலேயே தமிழர்களுக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அதிகார சபை அங்குரார்ப்பணம் மற்றும் உறுப்பினர் ஊக்குவிப்பு நிகழ்வில்...
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது 62) என்ற விவசாயியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் ஓருபகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மாலை இராணுவ முகாமிற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைத்த இராணுவத்தினர், கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப்பக்கமாக உள்ள பகுதிகளில் மக்கள் மீள்குடியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட...
ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அறிவித்தல் விடுத்தால் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்கத் தயாரென வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ கட்டளை தளபதியுடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த புதன்கிழமை சந்திப்பொன்றை...
வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
