250 கிலோகிராம் எடையுடைய வெடிக்காத குண்டு மீட்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் 250 கிலோகிராம் எடையுடைய விமான குண்டு ஒன்று, விமான படையால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

முகமாலை பிரதேசத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து, இந்த குண்டு கண்டுபிடிப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றிக் கொண்டிருந்த பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, விமான படையினர் வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில் வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts