- Wednesday
- January 14th, 2026
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் ஓருபகுதியில் மக்கள் மீள்குடியேறுவதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் மாலை இராணுவ முகாமிற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைத்த இராணுவத்தினர், கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப்பக்கமாக உள்ள பகுதிகளில் மக்கள் மீள்குடியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்ததாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட...
ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அறிவித்தல் விடுத்தால் வவுனியா ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தை விடுவிக்கத் தயாரென வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க தெரிவித்துள்ளார். வன்னி இராணுவ கட்டளை தளபதியுடன் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த புதன்கிழமை சந்திப்பொன்றை...
வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் எமது கிளிநொச்சி மாவட்டத்தினூடாக 83 தொடக்கம் 93 கிலோமீற்றர் வேகத்தில் கடும் சுழல்காற்று அடுத்துவரும் 24 மணிநேரங்களுக்குள் வீசக்கூடும். அதேவேளை 46 மில்லிமீற்றரில் இருந்து 57 மில்லிமீற்றர் வரையான மழைவீச்சியும் அடுத்துவரும் 24 மணிநேரத்தினுள் எதிர்பார்க்கப்படுகிறது. சடுதியான கனமழை காரணமாகவும் கடும் சுழல்காற்றுக் காரணமாகவும் நேரக்கூடிய போக்குவரத்துத் தடை, மின்சார மற்றும்...
நாடா" புயல்காற்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில், இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தரம் ஆறு...
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள, ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் தற்போது இவ்வருட நடுப்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேவேளை மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு மாற்று...
முல்லைத்தீவில் மாங்குளம் - துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை (30.11.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நல்லின யமுனாபாரி ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடமாகாண கால்நடை அபிவிருத்தி...
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றை தனியார்பஸ் ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.குறித்த விபத்தில் தனியார் மினிபஸ்சில் பயணித்த 14 பேர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில்...
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரை வீதியிலுள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் ரூபா பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த நிலையில்...
கிளிநொச்சி முழங்காவிலில் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் நேற்றுமாலை நடைபெற்றுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ள அவர்களும் கலந்துகொண்ட இந்தத் துப்பரவுப் பணியில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவும் செய்யும் பணிகள் நேற்று காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை முழங்காவில் துயிலுமில்லத்தில் துப்பரவுப் பணிகள்...
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்குச் சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின்...
கிளிநொச்சி கணகாம்பிகை குளத்தில் மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் சுடலை அமைத்துள்ளமையால் மழைக்காலங்களில் புதைக்கவும் முடியாது எரிக்கவும் முடியாத நிலையில் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது பாடசாலைக்கு அருகில் மக்களின் குடியிருப்புக்களுக்கு நெருக்கமாக புதிய சுடலை அமைக்கும் பணியை அரசியல் தரப்புக்கள் மேற்கொண்ட போது அதற்கு மக்கள்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் பிரதான வீதியில், கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள பாலம் நிர்மாணிக்கப்படாமையால், வெள்ள நீர் நிரம்பி பிரதேச மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் குறித்த வீதி, மழைக் காலங்களில் வீதி எங்குள்ளது, பள்ளங்கள் எங்குள்ளன என்பது தெரியாத அளவிற்கு காட்சியளிக்கின்றது. அண்மைய...
தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ - 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியினூடாக...
இராணுவத்தினரின் வசத்திலுள்ள, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு திங்கட்கிழமை விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், கிளி.மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய மேற்படி...
ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை...
சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலகத்தை சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன. வவுனியா...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நவீன விதை சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத்துக்கென 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம்...
கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி வயல் விதைப்பில் ஈடுப்பட்ட பின்னா் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநரைச் சோ்ந்த 57 வயது நிரம்பிய விவசாயியே எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார். எனவே...
நாச்சிக்குடாக் கடற்கரையில் பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது, நேற்றுப் புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நாச்சிக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற இவ்வாள் வெட்டுச் சம்பவத்தில், குமுழமுனை வீதி நாச்சிக்குடாப் பகுதியினைச் சேர்ந்த மீராசஜித்...
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவையொன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக...
Loading posts...
All posts loaded
No more posts
