- Friday
- November 21st, 2025
வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) கால்நடை மருத்துவ நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது. ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடைகளைச் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச் செல்வதில் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச நிர்வாகங்களில் 1099 பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 744 பணியாளர்களே கடமையாற்றுவதனால் 355 பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின்கீழ் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் என்பவனவற்றிலேயே குறித்த பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இதன் பிரகாரம் மாவட்டச் செயலகத்தில் 203 பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய...
யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...
யாழ் பல்கலைகழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25 ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவா்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றாா்கள். இதுவரை மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனையவா்களையும் கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான...
கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது கவலையைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கில் 1 இலட்சத்து 50...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11...
வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார்...
புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போதே, இந்த அனுமதி தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
வடபகுதி மக்களின் ஒற்றுமை சகல மக்களுக்கும் முன்மாதிரியாக அமையவேண்டுமென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒற்றுமையே தற்போது அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கடைத்தொகுதியை, அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கிளி.வர்த்தகர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”யாவரதும் ஒத்துழைப்பே இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தின் தேவையாக...
கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இன்றுத் திங்கட்கிழமை (07) காலை மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார், இந்த கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...
கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு (04-11-2016) வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வெள்ளி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேல் உள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது. இச்சம்பவத்தின் போது ஜந்து பவுன் தங்க நகைகளான...
கிளிநொச்சியில் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் மோதல் ஏற்படக் காரணமாக செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் கட்டைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நவநீதராசா என்பவருக்கே எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப்...
முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழ் மீனவர்களை தாக்கிய புல்மோட்டை முஸ்லிம் மீனவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் இதுவரை சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிப்பதற்காக கடற்தொழில் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார், தமிழ் மீனவர்களை உதவிக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இந்தத்...
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மரக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகருக்குக் கொண்டு செல்வதற்கு...
தனக்கு போதை தலைக்கேறியதால், கணவனொருவன் தன்னுடைய மனைவியை, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய மிகவும் அறுவறுக்கக் கூடிய சம்பவமொன்று வடக்கில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட, முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அப்பெண், யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லையென தெரிவித்த, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், அப்பெண்ணுக்கு மேலதிக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...
கிளிநொச்சி பொது வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதியில் தீயினால் பாதிப்புக்குள்ளான கடைத்தொகுதிகள் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணித்து 150 மில்லியன் ரூபா செலவில் நிலையான பொது சந்தை கட்டட தொகுதியொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார...
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் மருதம் என்ற பெயரில் மருதநிலத் தாவரங்களின் மாதிரிப் பூங்காவொன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கைச் சூழலை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாக வகைப்படுத்தியுள்ளது. இத்திணைகளில் ஒன்றான வயலும் வயல் சார்ந்த சூழலுமாகிய மருதநிலத்துக்கான தாவரங்களுக்குரிய மாதிரிப் பூங்காவொன்றே இரணைமடு இடதுகரை...
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள பெண்களை இராணுவம் தொடர்ச்சியாாக அச்சுறுத்தி வருவதாக கேப்பாப்புலவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடிய போதே...
கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் 74 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் 122...
Loading posts...
All posts loaded
No more posts
