Ad Widget

ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசாங்கம் தப்பிக்க முடியாது: சுமந்திரன்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதால் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காமல் போகுமென சிலர் அஞ்சுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள் ஒருவரான விவேகநந்தனூர் சதீஸ் எழுதிய விடியலைத் தேடும் உறவுகள் எனும் நூல் வெளியீட்டு விழா, கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வுக்கு வழியுண்டு என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டமை தொடர்பாக பல கேள்விகள் எழுந்திருந்ததை சுட்டிக்காட்டிய சுமந்திரன், தாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று புதிய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகள் குறித்த முதலாவது இடைமக்கால அறிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு, அதிகார பகிர்வு, ஆட்சி முறை உள்ளிட்ட சகல விடங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்படவுள்ளதாக குறிப்பிட்ட சுமந்திரன், எவ்வாறான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றதென அப்போது அனைவருக்கும் பகிரங்கமாக புலப்படுமென தெரிவித்தார்.

Related Posts