- Wednesday
- March 11th, 2026
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்....
பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...
வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழ் தேசிய...
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடாபில் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல்...
துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்...
ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பபட்டுள்ளனர். மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த பேராளிகளை கிளிநொச்சி பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். கிளிநொச்சி...
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான...
“பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், தெரிவித்தார். வவுனியா ரம்பவெட்டி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, புதன்கிழமை அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர்...
முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் சென்று நான்குபேர் கொண்ட குழுவினர் 60,000 பணத்தினை அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வீட்டு உரிமையாளரின் பெயரைச் சொல்லி அழைத்த நான்குபேர், தாம் சிஐடியினர் எனவும், விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பாக உங்களிடம் விசாரணை நடாத்தவேண்டுமெனவும்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவீரர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த நிறைவிற்கு பின்னர் சிதைக்கப்பட்ட குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினர் வசமிருந்த கனகபுரம்...
விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவும் வலுவான நிலையில் காணப்பட்டதால் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடியதாக இருந்ததெனவும் குறிப்பிட்டுள்ள வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், தற்போது அவ்வாறான ஒரு நிலை இல்லையெனக் குறிப்பிட்டுளார். முல்லைத்தீவு தேவிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே...
இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய...
இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய காணி, எதிர்வரும் 8 ஆம் திகதி, கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகக் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தற்போது தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரை சுமார் இரண்டாயிரத்து 680க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். கிளிநொச்சி...
முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் அமைக்கப்பட்ட மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்று (திங்கட்கிழமை) மாலை திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சிலையின் தோற்றம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவந்திருந்த நிலையில், சர்ச்சைகளை கடந்து குறித்த சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில்...
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கணவன்...
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமக்கு வேலை...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில்...
Loading posts...
All posts loaded
No more posts
