தீவகத்தில் காணாமற்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டனர்!

யாழ்.தீவக பகுதிகளில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்ப்பட்டு மண்டைதீவுப் பகுதியில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டிருக்கலாம். ஒரு கிணறு தோண்டப்பட்டபோது 85 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டன மற்றைய கிணறுகளை தோண்டுவதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டது. அவற்றையும் தோண்டுங்கள் பல உன்மைகள் தெரியும். மேற்கண்டவாறு காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வேலுப்பிள்ளை பேரின்பநாயம் என்பவர்...

தீவகத்தில் பலர் காணாமல் போக கடற்படையும் ஈ.பி.டி.பியுமே காரணம்!

தீவகத்தில் பல இளைஞர், யுவதிகள் காணாமற் போனமைக்கு கடற்படையினரும் ஈ.பி.டிபியினருமே காரணம் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் காணாமற்போனோரின் உறவினர்கள் பலரும் ஆதாரங்களுடன் தமது சாட்சியங்களைப் பதிவு செய்தனர். காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று நடந்தன. இதில் சாட்சியமளிப்பதற்காக 193 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு...
Ad Widget

ஐநா 31ஆவது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமை பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர் இன்று (29) ஆரம்பமாகிறது. எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஆரம்பித்து வைப்பதுடன் உரையாற்றவுமுள்ளார். இவ்வுரையில் இலங்கை விஜயத்தின் போது பெற்ற அனுபவங்கள் தொடர்பிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

இலங்கை சிங்கங்களை வென்ற வங்க புலிகள்!

ஆசியக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஷப்பிர் ரகுமான் (Sabbir Rahman), 80 ஓட்டங்களைக் குவித்தார். இவரது இந்த அபார ஆட்டத்தின் உதவியுடன், பங்களாதேஷ், 20...

யாழ் நகரில் பொலிசாருடன் இளைஞன் மோதல்!!

யாழ் நகரப் பகுதியில் இளைஞனுக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது அத்துடன் பொது இடத்தில் குறித்த இளைஞன் பொலிசாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் வீதியால் சென்ற பலர் பார்வையிட்டுள்ளதுடன் பின்னர் குறித்த இளைஞரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்…

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு! யாழ்.மாணவி தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூரைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை...

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார்

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார்.   யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்...

சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது

வவுனியா, தரணிக்குளம் பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இருவரை சனிக்கிழமை (27) வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறுமியின் தாய் வேலைக்கென வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாகவும் இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளதாகவும் தந்தை கூலி வேலை செய்பவர்; எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சம்பவ தினம் சிறுமியின் தந்தை,...

தன்னையும் கைதுசெய்யலாம்- மஹிந்த

எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் தன்னைக் கைதுசெய்யலாம் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, விமல் வீரவங்க, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம ஆகியோரைக் கைதுசெய்த பின், இறுதியாக தான் கைதுசெய்யப்படலாம் என, அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (28) தலதா மாளிகைக்கு சென்ற அவர்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வருடாந்த மாநாடு (தீர்மானம், படங்கள் இணைப்பு)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு நேற்று 27-02-2016 சனிக்கிழமை யாழ் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வு துசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக தமிழ்த் தேசிய மக்கள்...

மீண்டும் வவுனியாவில் சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு...

தாஜுதீன் படுகொலையின் பிரதான சூத்திரதாரி நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த புதல்வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவின் பூரண ஒத்துழைப்புடனேயே பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன எனவும், அந்தக் கோணத்தில் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் வட்டாரங்கள்...

இந்தியா அபாரம்: சுருண்டது பாகிஸ்தான்

பாண்ட்யாவின் அசத்தலான பந்துவீச்சால் 83 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. பங்களாதேஷில் நடக்கும் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. பாகிஸ்தானுக்கு தொடக்கம் கொடுத்த ஹபீஸ் (4), சர்ஜில்கான் (7),...

ஜோசப் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டுத்தாருங்கள்!

"காயமடைந்த நிலையில் மக்களுடன் வந்த எனது கணவரை வவுனியா வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் சென்றதைக் கண்டபோதும் தற்போது அவர் இல்லை என மறுக்கின்றனர். எனது கணவரை வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என நான் கருதுகின்றேன். எனவே, எனது கணவரை மீட்டுத்தாருங்கள்" - இவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் உள்ளகப் புலனாய்வுப் பொறுப்பாளராக...

இராணுவமும் ஈ.பி.டி.பியுமே எனது மகனை கடத்தியது! கண்ணீர் மல்க தாயார் சாட்சியம்

'இராணுவத்தினருடன் வந்த ஈ.பி.டி.பியினர் கடத்திச் சென்ற எனது மகனை கடற்படையின் சீருடையுடன் எனது உறவினர்கள் பலரும் கண்டுள்ளனர்.' இவ்வாறு காணாமல் போன நபரான நீர்வேலி வடக்கைச் சேர்ந்த அச்சுதன் வைகுந்தன் என்பவரின் தாயார் அருந்ததி காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி...

அரச உத்தியோகத்தர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு

அரச உத்தியோகத்தர்களை ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் பிரதேச செயலகங்களில் காணப்படுகின்ற கடமைகள் மற்றும் பொருத்தமான விடய அறிவு மற்றும் தேர்ச்சி என்பன இந்த உத்தியோகத்தர்களிடத்தில் இல்லாதபடியினால் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை அடைந்து கொள்வதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளதையடுத்தே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த முன்மொழிவிற்கு அமைச்சரவை...

கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தூக்கு தண்டனை!

ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதை பொருள் கடத்தியதாக தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவுனர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் எதையுமே முன்னெடுக்காத அரசால் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை சீர்செய்ய முடியவில்லை, இதனால் வாழ்வாதாரம் தேடிய...

யாழில் புறக்கணிக்கப்படும் அங்கவீனர்கள்!- மூன்றில் ஒருவருக்கு அரச உதவி மறுப்பு

யாழ் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 491 அங்கவீனர்கள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 10 பேருக்கு மட்டும் மத்திய அரசினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்படுகிறது. ஏனையோருக்கும் இதே கொடுப்பனவை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்ட போது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில்...

பப்புவா நியூகினியா தீவில் 12கைதிகள் சுட்டுக்கொலை!

பப்புவா நியூக்கினியா தீவின் பெரிய நகரமான லேயிலுள்ள பயிமோ என்ற பெரிய சிறையிலிருந்து தப்பியோடிய பன்னிரண்டு கைதிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயிமோ சிறையின் முக்கிய நுழைவாயிலிற்கு அதிரடியாக நுழைந்த 94 இளைஞர்கள் அங்கிருந்த காவலாளிகளை மடக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து பொலிசார் அவ்விடத்திற்கு வந்து சுட்டத்தில் பன்னிரண்டுபேர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 18பேர் காயமடைந்துள்ளனர்,...

இன அடையாளத்தை காப்பாற்றுமாறு பறங்கியர் கோரிக்கை

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பறங்கியர் இனத்தின் அடையாளமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சாசனம் ஒன்றை இயற்றுவது தொடர்பிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தமது அமர்வைகளை நடத்தியபோது, பறங்கியர் சமூகத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கும் பறங்கியர் போன்றவர்களின் அபிலாஷைகள்,...
Loading posts...

All posts loaded

No more posts