Ad Widget

யாழில் புறக்கணிக்கப்படும் அங்கவீனர்கள்!- மூன்றில் ஒருவருக்கு அரச உதவி மறுப்பு

யாழ் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 491 அங்கவீனர்கள் உள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 10 பேருக்கு மட்டும் மத்திய அரசினால் மாதாந்தம் மூவாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்படுகிறது.

ஏனையோருக்கும் இதே கொடுப்பனவை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்ட போது அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகிறன. இதில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 92 பேரும், நெடுந்தீவில் 164 பேரும், வேலணையில் 275 பேரும், ஊர்காவற்றுறையில் 150பேரும், காரைநகர் பிரிவில் 28பேரும், யாழ் பிரதேச செயலர் பிரிவில் 391பேரும், நல்லூர் பிரிவில் 512 பேரும், சண்டிலிப்பாய் பிரிவில் 20பேரும், சங்கானை பிரிவில் 362பேரும், உடுவில் பிரதேச பிரிவில் 398பேரும் வாழ்கின்றனர்.

இதே போல் தெல்லிப்பளை பிரிவில் 426 பேரும், கோப்பாய் பிரிவில் 843 பேரும், கரவெட்டி பிரிவில் 460 பேரும், பருத்தித்துறை பிரிவில் 196 பேரும், மருதங்கேணி பிரிவில் 484 பேருமாக யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 491 அங்கவீனர்கள் உள்ளனர்.

இவ்வாறு உள்ள 6 ஆயிரத்து 491 பேரில் மூவாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்படும் 2 ஆயிரத்து 10 பேர் தவிர்ந்த ஏனைய 4 ஆயிரத்து 481 பேர் பெரும் இடரின் மத்தியில் வாழ்வதார நெருக்கடியுடன் வாழும் மேலும் 3280 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்க அனுமதிக்குமாறு சமூக சேவை அமைச்சைக் கோரியுள்ளோம்.

இருப்பினும் அதற்கான அனுமதி இன்று வரை கிடைக்கவில்லை. குறித்த அனுமதி கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஏனையோருக்கும் வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts