- Saturday
- June 13th, 2026
"கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உதவவேண்டும்.'' - இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14...
உதயன் நாளிதழின் முன்னாள் செய்தியாசிரியர் ஞா.குகநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தது ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சி. சுவிற்சர்லாந்தில் ஐ.பி.ஸி. தமிழ் தொலைக்காட்சியின் ஆரம்ப விழா கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே சாதனையாளர் விருது குகநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சியின் கெலும் மக்ரே, ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம், கலைஞர் க.செ.துரை,...
தமிழ் அரசியல் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த, யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகன் மற்றும் கணேசரத்தினம் சாந்ததேவன் ஆகியோர் ஆறு வருடங்களின் பின்னர் கொழும்பு விசேட நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த கோமகன் மற்றும் சாந்ததேவன் ஆகியோர் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட்...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 14 பேரை சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு நேற்றயதினம் நடைபெற்றது. வவுனியா புனர்வாழ்வு இணைப்புக் கரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் இந்நிகழ்வில்...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம் நேற்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக...
நல்லாட்சி அரசாங்கம் தனது கணவரையும் ஏனைய அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வின் ஊடாகவோ அல்லது பொது மன்னிப்பின் அடிப்படையிலேயோ, விடுதலை செய்ய வேண்டுமென, மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி ஒருவரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2009ம் ஊனமுற்ற...
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.
யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஸ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது...
யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை பின்னால் வந்த உழவு இயந்திரம் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேரூந்தில் ஏற முற்பட்ட இரு கைகளையும் இழந்த பெண்ணின் கால்கள் மேல் உழவு இயந்திரம்...
யாழ். மாவட்டத்தில் சிறுமிகளுக்கான சீர்திருத்தப்பள்ளி இல்லாததன் காரணமாக, அவர்கள் வேறு சிறைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் சிறுமிகள் பெரும்பாலானோர் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் யாழ். மாவட்ட ஆணையாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (28) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் பொண்கள் விவகாரம் தொடர்பில்...
சுண்டுக்குழி பகுதி வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியொருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவமொன்று, திங்கட்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 6 மணியளவில், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த மேற்படி சிறுமியை, வெளியில் அழைத்துச்சென்றுள்ள சந்தேகநபரான இளைஞன், அச்சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்....
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கவுள்ளதாக அச்சுவேலி இராஜமாணிக்கம் திருமண மண்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் 06ஆம் திகதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலவசமாக தாலி, பட்டுப்புடவைகள், வேட்டிகள், வாழ்வதார உதவி மற்றும் வீட்டுத்தளபாடங்கள் என்பன திருமணத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், திருமண செலவுகளையும் இராஜமாணிக்க திருமண...
வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 63பேர், இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்குமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கெனவே,...
இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவராக விளங்கியவர், முன்னாள் கேப்டன் 38 வயதான மஹேலா ஜெயவர்த்தனே. 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒரு நாள் போட்டியில் இருந்தும், 2014-ம் ஆண்டு உலக கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு...
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணியினர் சிறப்பாக விளையாடியிருந்தனர். பங்களாதேஷ் அணியின் ஆட்டத்தை பார்க்கும் போது அபாயகரமான அணியாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணிக்கு நாம் எப்போதும் ஆதரவாக இருப்போம். இதுபோன்று இலங்கை ரசிகர்கள் தமது ஆதரவினை இந்நேரத்தில் இலங்கை அணிக்கு...
பிரிட்டனில் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பெண் ஒருவருக்கு, அவசரமாக ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு தேவைப்படுவதால், அதற்கான தேடுதல் உலகளவில் நடைபெற்று வருகிறது. அவரது உடலோடு பொருந்திப்போகக் கூடிய குருத்தணு நன்கொடை எவ்வளவு விரைவாகக் கிடைக்குமோ, அவ்வளவு விரைவாக அவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டிஃப் பல்கலைக்கழக மாணவியான...
வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயகத்திற்கு முன் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம், யாழ் இந்திய துணைத் தூதரக அலுவலகம் வரை சென்றது. இருநாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் தொழிலை செய்வதற்கு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 27...
62 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த தனது தீவிர ரசிகரான முகம்மது பஷீருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து வங்கதேசத்திற்கு வரவழைத்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசியாக் கோப்பைப் போட்டியை பார்க்க உதவியுள்ளார் கேப்டன் டோணி. மிர்பூரில் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி இரு நாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போட்டியில் இந்தியா அபார வெற்றி...
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மேட் மேக்ஸ் ப்யூரி ரோட் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை பெற்றுள்ளது. இவ்விழாவில் இந்தியா தரப்பில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். இவர், சிறப்பு ஒளிப்பதிவாளராக தேர்வு...
நடிகர் திலகம் சிவாஜி, வாணிஸ்ரீ, லதா, ஏவிஎம் ராஜன், நடித்த 'சிவகாமியின் செல்வன்' 1974ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் இயக்கிய சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். இனியவளே என்று பாடி வந்தேன்...., மேளதாளம் கேட்கும் நேரம் பெண் பார்க்க வந்தேனடி..., எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது...,...
Loading posts...
All posts loaded
No more posts
