வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயகத்திற்கு முன் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம், யாழ் இந்திய துணைத் தூதரக அலுவலகம் வரை சென்றது.

இருநாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் தொழிலை செய்வதற்கு பேச்சு வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 27 பேரும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும், அத்துமீறி வரும் தமிழக மீனவர் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு என்ன? வடபகுதி மீனவர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு பதில் என்ன? எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.

பின்னர் யாழ் இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஐனிடம் மகஜர் ஒன்றும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts