- Saturday
- June 13th, 2026
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை சகோதரர்களும் உறவினருமாக வாள்கள் கத்தி சகிதம் சென்று குத்திக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளார். தண்டப் பணம் செலுத்தத் தவறினால் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்...
உடல்நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு முதியோருக்கான உடற்பயிற்சி நிகழ்வு நேற்று முன்தினம்(29) யாழ் மாவட்டச்செயலகத்துக்கு எதிரே உள்ள பழைய பூங்காவில் காலை 9.30 மணி தொடக்கம் காலை 11 மணிவரை நடைபெற்றது. முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த உடற்பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட மட்ட மற்றும் பிரதேச...
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அவர் யாழ் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், குறித்த இராணுவச் சிப்பாய் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதான...
குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவிலுள்ள பாடசாலை ஒன்றில், முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பரவிய வதந்தியைடுத்து மூடப்பட்ட பாடசாலையை, நாளை நடைபெறவிருக்கும் உயரதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய போதிய அறிவு இலங்கை மக்களுக்கு...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7ஆவது ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இரு அணிகளிடையேயான ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் சண்டிமல்...
ஐ.நா. அமைப்பின் இன்னர் சிட்டி பிரேஸ் என்ற இணையத்தின் சர்வதேச ஊடகவியாளர் மாத்தியூ லீ ஐ.நா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையை கண்டித்து இன்று யாழ் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காணாமல் போனோரின்...
கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது....
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நீதிபதி எம்.சாந்தி, உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மிர்புரில் நடைபெற்ற ஆட்டத்தில் அம்ஜத் ஜாவேத் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், அப்ரிடி தலைமையிலான...
யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள செம்மணி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இதனைக் கருத்தில் கொண்ட நல்லூர் பிரதேச சபை மற்றும் மாநகர சபை ஆகியன செம்மணி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்தன. தற்போது அங்கு விசேட கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அவ்விடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் கடந்த 20ம் திகதி அதிகாலை வேளையில் குறுகிய நேரத்திற்கள் ஏழு வீடுகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதானது, குடாநாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலையை மீண்டும் உருவாக்கியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம்...
நடைபெறவுள்ள ரி-ருவென்டி உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை, தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி தனதாக்கிக் கொண்டுள்ளது. மார்ச் மாதம் 8ஆம் திகதி இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஐ.சி.சி. சம்பியன் கிண்ண போட்டிகள்,...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன், தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம்...
சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. வனப் பகுதியின் வெத்தாகல மற்றும் பொதுபிடியவுக்கு இடையிலுள்ள பனபொல - கோஸ்குலன பிரதேசத்தில் இந்த விலங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் இன்றி மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு நிற ரோமங்களையுடைய இந்த விலங்கு, 3 கிலோ 300 கிராம் நிறையுடையது எனவும், 60 சென்றிமீற்றர் வரையான...
சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் தனது மகன் காணப்பட்டதாக தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்துள்ளார். காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஐனாதிபதி ஆணைக்குழு முன் அவர் தனது மகன் சம்பந்தப்பட்ட புகைப்படத்தையும் காண்பித்து அடையாளம் காட்டினார். காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்று யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்தில்...
பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க பங்குபற்றியிருக்காத நிலையில், ஆசியக் கிண்ணப் போட்டிகளின் எஞ்சிய போட்டிகளிலும் அவர் பங்குபெறுவது சந்தேகமானது என எதிர்பார்க்கப்படுகிறது. லசித் மலிங்க இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய அஞ்சலோ மத்தியூஸ், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, லசித் மலிங்கவின் உடற்றகுதி தொடர்பான சந்தேகத்தை...
யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், நேற்று (29) சாட்சியமளித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வின் போது,...
காணாமற்போன எனது மகள் சிவலிங்கம் அனுசியாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒருமுறை கண்டேன். அதன் பின்னர் முகப்புத்தகத்தில் இலக்கம் போடப்பட்டு, தரவேற்றியிருந்த படங்களையும் நான் பார்த்தேன் என, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் சாட்சியமளிக்கச் சென்ற தாயொருவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய எனது மகளை, 2007ஆம்...
காணாமற்போனோர் தொடர்பான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்' என காணாமல்போனோரின் உறவினர்களிடம், காணாமற்போனரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், 'நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம்....
Loading posts...
All posts loaded
No more posts
