யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவர் யாழ் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த இராணுவச் சிப்பாய் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.