உலக சாம்பியன் இலங்கையின் இறுதிசுற்று வாய்ப்பு பறிபோனது!! வங்காளதேசம் இறுதிப்போட்டியில்

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வெளியேற்றி வங்காளதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்கிறது. 5 அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- வங்காளதேச அணிகள் மோதின....

இருமுகன் யூனிட்டை அசரவைத்த விக்ரம்!

விக்ரமுடன் முன்பு ஒரு படத்தில் நடிக்கயிருந்த நயன்தாரா, சில காரணங்களால் அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால் இப்போது ரகசிய ஏஜென்ட், திருநங்கை என இரண்டு விதமான வேடங்களில் விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைந்திருக்கிறார். மேலும், வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களைகூட ஆச்சர்யப்படுத்தி வந்துள்ள விக்ரம், இந்த படத்தில் நடித்துள்ள...
Ad Widget

மியாவ் ஆடியோ விழாவில் கமல்ஹாசன்-சிவகார்த்திகேயன்!

சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ராஜா, காயத்ரி என்ற புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் ஒரு பூனை பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது. செல்பி என்கிற பெர்சியன் ரக பூனைதான் இந்த படத்தில் சிலரை சஸ்பென்சாக பழிவாங்குகிறதாம். அந்த பூனை பழி வாங்கும் காட்சிகள் சம்பந்தப்பட்ட சிஜி ஒர்க் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வின்சென்ட் அடைக்கலராஜ்...

நடிகர் சங்க பொதுக்குழு 20-ந்தேதி கூடுகிறது ரஜினிகாந்த்-கமல்ஹாசன் உள்பட 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு

நடிகர் சங்க பொதுக்குழு வருகிற 20-ந் தேதி கூடுகிறது. இதில் பங்கேற்க ரஜினிகாந்த் உள்பட 3 ஆயிரத்து 200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். இதுவரை 5 முறை செயற்குழு கூட்டங்கள்...

ராஜீவ் வழக்கில் ஏழ்வரையும் விடுவிக்க முடிவு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய மத்திய அரசின் கருத்தைக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்...

யாழில் தண்ணீர்ப் போத்தலில் கரப்பான் பூச்சி!!!

கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் சுகவீனமுற்றிருந்த தனது தாயாருக்கு 19 லீற்றர் நீர் கொள்ளளவுடைய தண்ணீர்ப் போத்தலைக் கொள்வனவு செய்துள்ள நிலையில் அப் போத்தலிற்குள் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியொன்று காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த தண்ணீர்ப் போத்தல் கோண்டாவில் சுகாதார வைத்திய...

கைதடி – நாவற்குழி பாலத்தில் விரிசல்! மக்களே அவதானம்!!!

கைதடி - நாவற்குழிப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால் பயணிப்போர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விரைவாக குறித்த பாலத்தை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்.மாவட்டப் பிரதான பொறியியலாளர் வி.சுதாகர் தெரிவித்தார். கைதடி - நாவற்குழிப் பாலம், கடந்த 2000ஆம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக அழிக்கப்பட்டது....

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்!

மகேஸ்வரி நிதியத்தால் தங்களுக்கு வழங்க வேண்டிய 10 மில்லியன் ரூபாய் பணம் இன்னமும் தராமல் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்து யாழ்.மாவட்ட பாரவூர்திகள் உரிமையாளர் சங்கத்தால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றியிறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும்...

மருத்துவ தேவைகளுக்காக ஆளுநர் நிதிய நிதியுதவி

மருத்துவ தேவைகளுக்காக ஆளுநர் நிதிய நிதியுதவி வழங்கும் வைபவம் வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையில் நேற்று (01) யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மருத்துவ தேவைகளுக்காக 76 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதன்போது பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மற்றும் மாகாண செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நாட்டில் நல்லாட்சியா? யாழில் மக்கள் ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக இலங்கையின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுசன அமைப்பின் எற்பாட்டில் கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. நீண்டகாலமாக விசாரணைகளின்றி மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14...

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் இருவர் விடுவிப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விடுவித்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும்...

பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முகேஷ் அம்பானி 36 இடம் வகிக்கிறார். 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810...

அனிருத்தை கலாய்க்கும் சினிமா நண்பர்கள்!

3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து கிடுகிடுவென வளர்ந்தவர் அனிருத். பீல்டில் என்ட்ரியாகி சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசைய மைத்ததோடு, முன்வரிசையில் இருந்து கொண்டிருந்த இசையமைப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்தவர் அனிருத். ஆனால் அப்படி அவர் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதுதான் பீப் பாடல் விவகாரம்...

வதந்தியே உண்மையானால் பெரிய சந்தோசம்!- ஐஸ்வர்யா

அட்லி இயக்கத்தில் 'தெறி' படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். குடும்பப் பாங்கான கதை கொண்ட அந்த படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, அவருக்கு அப்படத்தில் மூன்று நடிகைகள் ஜோடி என்றும், அந்த வேடங்களில் காஜல்...

ரஜினிக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கி உள்ளது. இது தொடர்பாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணி, தேர்தல் விழிப்புணர்வு படத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்...

இன்று செங்கை ஆழியானின் இறுதி யாத்திரை!

செங்கை ஆழியான் என அறியப்பட்ட பிரபல எழுத்தாளர் கலாநிதி கந்தையா குணராசாவின் இறுதிக்கிரியைகள் இன்று காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக அவரது உடல் கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் பூதவூடலுக்கு அரச அதிகாரிகள், கல்விமான்கள் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 ‘இரு மகன்களையும் தொலைத்து விட்டேன்’ உறவுகளின் கண்ணீர் கதைகள்!!!

'இராணுவச் சுற்றிவளைப்பின் போது ஒரு மகனையும், இந்தியாவுக்குச் சென்ற இன்னொரு மகனையும் இழந்து வருந்துகின்றேன்' என தச்சந்தோப்பைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற தாயார் கூறினார். காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் காணாமற் போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...

கண்டாவளையில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள 88 ஏக்கர் காணிகளையும் சுவீகரிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் தெரிவித்தார். கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம், தர்மபுரம் நெசவுச்சாலை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை (01)...

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதை ஏற்கமாட்டேன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது. அமர்வு முடிவடைந்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் இன்று மாபெரும் போராட்டம்!

நீண்டகாலமாக விசாரணைகளின்றி மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts