கைதடி – நாவற்குழி பாலத்தில் விரிசல்! மக்களே அவதானம்!!!

கைதடி – நாவற்குழிப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அதனால் பயணிப்போர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விரைவாக குறித்த பாலத்தை சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ்.மாவட்டப் பிரதான பொறியியலாளர் வி.சுதாகர் தெரிவித்தார்.

கைதடி – நாவற்குழிப் பாலம், கடந்த 2000ஆம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாக அழிக்கப்பட்டது. இதன் பின்னர், 2001ஆம் ஆண்டு இராணுவத்தின் பொறியியல் பிரிவால் பாலம் இரும்புக் கேடர்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது. அன்று தொடக்கம் இன்று வரையும் குறித்த பாலம் மாற்றப்படவில்லை.

ஏ-9பிரதான வீதியில் முக்கிய பாலமாக இது காணப்படுகின்றது. குறித்த பாலத்தால் தினமும் ஆயிரக்கணக்கானோரும், ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களும் பயணிக்கின்றன.

இந்த நிலையில் பாலத்தில் கரையோரமாக ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறு பிளவு தற்போது விரிவடைந்துள்ளது. அதனால் பாலத்தில் பயணிப்பவர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

kaithady-navar-kuly-bridge-palam-2

kaithady-navar-kuly-bridge-palam-1

Related Posts