பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் முகேஷ் அம்பானி 36 இடம் வகிக்கிறார்.

bill-gates-jpg

2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்(75 பில்லியன் டாலர்கள்) முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இவர் கடந்த 22 ஆண்டுகளில் 17வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே அமென்சியோ ஒர்வேகாவும், வாரன் பபெட்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 16வது இடம் வகித்த பேஸ்புக் நிறுவனர் மார்க்கர் ஜக்கர் பெர்க், இந்த ஆண்டு 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சேர்ந்த 84 பில்லியனர்களில், முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். மொத்த பட்டியலில் 36வது இடம் பிடித்துள்ள இவரின் சொத்து மதிப்பு 62.2 பில்லியன் டாலர்கள். இவரைத் தொடரந்து, சன் பார்மா மருந்து கம்பெனி தலைவர் திலீப் சாங்வி(44), விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி (55), எச்.சி.எல்., நிறுவனர் சிவ் நாடார்(88) ‘டாப்-100’ல் இடம் பிடித்துள்ளனர்.

Related Posts