Ad Widget

பணிப்பாளரின் அசட்டையீனத்தால் பலிக்கடாக்களாகும் யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள்

நிர்வாகச் சீர்கேடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களால் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.07.2015) மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுத்தமில்லாமல் காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பதார்த்தங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். சம்பவம்...

திருகோணமலையில் மூன்று கிடைத்தால் முஸ்லிம்களுக்கு ஒன்று! – சம்பந்தன் உறுதிமொழி

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால், ஒன்றை முஸ்லிம்களுக்கே வழங்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை நியூ சில்வஸ்டர் ஹோட்ட லில் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, மத்திய அரசாங்கத்துடன்...
Ad Widget

சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்கிறார் மஹிந்த!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துர் எம்.கே.சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. ரத்கமவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடும் சூழலை எனது அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்தது....

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள்! – வடக்கு, கிழக்கு மக்களிடம் மாவை வேண்டுகோள்

தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும். - இவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த...

அரச அதிகாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்க சீன அரசு தயார்!

இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் பட்டமேற்படிப்புக்களுக்கும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பயிற்சி நெறிகளுக்கும் புலமைப்பரிசில்களை வழங்க சீன அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த தேசப்பிரிய தெரிவித்தார். த ஹஸ்ட் பல்கலைக்கழகத்தின் (The HUST (Huazhong University of Science and Technology) ) பேராசிரியர் சூ ஷியாலியான்...

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொலிஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் காரில்...

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் – டக்ளஸ்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

எமது மக்களின் பிரச்சினைக்களுக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் – அங்கஜன்

எமது மக்களின் அன்றாட மற்றும் நிரந்தர பிரச்சினைகளிற்கு தீர்வு காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கரங்களை பலப்படுத்த நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் எமது வளமான எதிர்காலத்தை அடைய முடியுமென ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – கருணா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,“கடந்த அதிபர் தேர்தலில்...

சிங்களதேசதேசத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தமிழ்த்தேசிய அவை நிறுவப்படும்! வி- மணிவண்ணன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர்  திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும். அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும்.என அவர்...

குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார். அரசியல் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகள், வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக இப்போதிருந்தே...

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும்: – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. நாம் வலிமையோடு மீண்டெழுந்து முன்வரவேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்ற உறுதிப்பாட்டோடு எமது உரிமைக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் திருமதி பத்மினி சிதம்பரநாதன்...

சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் குறித்து அதிக முறைப்பாடுகள்!

பொதுத் தேர்தல் தொடர்பில் 304 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் அதிகப்படியான 118 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காட்சிபடுத்தப்பட்டமை குறித்து 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முறைப்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. பொருட்கள்...

கஞ்சா விற்க முற்பட்ட இருவர் கைது

பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ். நகருக்கு கஞ்சாவை கொண்டுவந்து விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேக நபர்களை யாழ். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஒரு தொகை கேரளா...

பிரேமதாஸ மைதான வன்முறை: நால்வர் கைது

கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள்...

யாழில். 15 ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 15 ஆயிரம் பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தபால்...

தொலைக்காட்சி மீதான வழக்கு; சட்டமா அதிபரின் ஆலோசனையை நாட பொலிஸார் முடிவு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு நேரம் தொடர்பில் தவறான அறிவித்தலை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எதிராக வழக்கை தொடர்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரும்...

கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்!

தேசிய அபிவிருத்தி நிலையத்தில் பிராந்திய நிலையங்கள் மூலம் "முதியோர் பராமரிப்பு டிப்ளோமா" "சமூக பராமரிப்பு டிப்ளோமா"கற்கை நெறிகளை பயில்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மேற்படி பாடநெறிக்கான வகுப்புக்கள் வாராந்தம் சனி ஞாயிறு தினங்களில் நடைபெறவுள்ளன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக பதிவாளர் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் 488A, நாவல...

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை உருத்திரபுரம் பிரதேசத்தின் வயல் பகுதியில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் சடலத்தின் பெரும் பகுதி அலுகிய நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 21ம் திகதி காணாமல் போன குறித்த...

வலி.வடக்கு விடயம்; இராணுவத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றம்

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட பாதைகளை விடுவிக்க மற்றும் எஞ்சிய காணிகளை விடுவித்தல் தெடர்பான விடயங்களில் இராணுவத்தினர் விடாப்பிடியான நிலைப்பாடு ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பஸ்நாயக்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்த குழுவினரை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி வரவேற்றார். இதன்பின்னர் முப்படைத்தளபதிகள் ,...
Loading posts...

All posts loaded

No more posts