சினிமா ஊடாக வீட்டுக்குள் வந்து சேருகின்ற பேராபத்து! – திரைப்படம் இனிமேல் சிறுவருக்கு உகந்ததல்ல

எனது வீட்டைப் பொறுத்தவரையில் அப்பாவோ கணவரோ சிகரட் புகைக்கும் பழக்கம் இல்லாதவர்கள். என்றபோதும் எனது நான்கரை வயதேயான குட்டி மகன் பல்குத்தும் குச்சியை அடிக்கடி எடுத்து விளையாடும் போது தனது வாயில் ஒரு பக்கத்தில் வைத்து கொள்வதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது ஆபத்தானது என்பதனால் அதனை கண்காணாத இடத்தில் ஒழித்து வைத்தேன். ஆனால் என்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபாய் புலமைப்பரிசில் 4,000 ரூபாயாக அதிகரிக்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாபொல புலமைப்பரிசில் தொகையை 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதால் அதனுடன் ஒப்பிட்டு இதனை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Ad Widget

விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ், குடிசார் எந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் எந்திரவியல், கனிய அளவையியல், பொறிமுறை எந்திரவியல் (ஓடோ மொபைல்) ஆகிய கற்கை நெறிகள் உள்ளன. வர்த்தகத்துறை கற்கை நெறிகள் என்னும் வகைக்குள் தேசிய கணக்கீட்டு...

ஒத்துவராத ஆடைகளுடன் வந்த ஆண்களுக்கு அபராதம்

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு கலாசாரத்துக்கு ஒத்துவராத ஆடைகளுடன் வந்த ஆண்கள் ஐவருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார். நீதிமன்ற வழக்குக்கு வந்திருந்த நபர்களின் ஆடை தொடர்பில் வியாக்கியானம் தெரிவித்த நீதவான், குறித்த ஐவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு...

மருந்தாளர்களுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு மருந்தாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருந்தகங்களை கொண்டு நடத்துவதற்கு, மருந்தக உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கையில் சுமார் 30 ஆயிரம் மருந்தகங்கள் இருக்கின்றபோதும், பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் மாத்திரமே காணப்படுகின்றனர். மருந்தாளர்கள் கற்கைநெறிகளை பூர்த்தி செய்பவர்கள் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு முன்வருவதில்லை. மாறாக அரச...

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார். தற்போது...

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பாக பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தில் 2012 மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் எதிர்வரும் 9,10ஆம் திகதிகளில் நேர்முகப்பரீட்சை இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருக்கின்றமை யாவரும் அறிந்த ஒன்றே. மேற்படி நேர்முகத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கான அனுமதிக்கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. எனினும்...

எதிர்கட்சி தலைவர் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் புறக்கணித்த முதலமைச்சரும் அமைச்சர்களும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார். அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டார். முதல் நாள் தந்தை செல்வா நினைவுத்தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின் நல்லூருக்குச் சென்று வழிபட்டார். இலங்கை தமிழரசுக்...

ஒரு குழந்தையைப் பெறுமதியுள்ள மனிதனாக ஆசிரியரால் மாற்ற முடியும்! -ஜனாதிபதி

"ஒரு தாய் பெற்றெடுக்கும் குழந்தையை உண்மையான மனிதனாக்க ஒரு ஆசிரியரால் முடியும். அதேவேளை அந்தக் குழந்தையை தத்துவவாதியாக, அறிஞராக, கலைஞனாக, அரசியல்வாதியாக, மக்கள் தலைவனாக ஆக்குவதற்கான இடமாக இருப்பது பாடசாலையாகும்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். "மாணவர்களை அறிவுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக, திறமையான சிந்தனைகளைக் கொண்டவர்களாக ஆக்கும் பிரதானமான பொறுப்பு ஆசிரியர்களுடையது. ஆசிரியப் பணியானது...

ஹஜ் யாத்திரையின்போது நெரிசலில் சிக்கி இலங்கையர் ஒருவரும் மரணம்!

ஹஜ் யாத்திரையின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டுள்ளது. சவூதிஅரேபியாவின் மெக்காவில் ஹஜ் யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில், இலங்கையர் ஒருவரின் ஜனாஸா அடையாளம் காணப்பட்டுள்ளது. காணாமற்போயிருந்த தம்பதியினரில் கணவரின் ஜனாஸா மெக்காவிலுள்ள பிரேத அறையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தனக்கு உறுதிசெய்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும்...

கலப்பு நீதிமன்ற விவகாரத்தால் நாடாளுமன்றில் களேபரம்!

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கலப்பு (ஹைபிரிட்) நீதிமன்றம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபைக்குள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் சபைக்குள் பெரும்...

வடக்கு நோக்கி செல்லவிருந்த நான்கு ரயில்கள் இரத்து

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரவு நேர தபால் ரயில்கள் நான்கு சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசந்துறை மற்றும் தலைமன்னார் நோக்கி செல்லும் ரயில்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே முனபதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்களின் பணம் மீளவழங்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு...

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறியந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள் EXAM இடைவௌி சுட்டெண்ணைக் குறிப்பிட்டு (EXAM__(SPACE) INDEX NUMBER) 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்பி உங்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.

வேப்பமரத்தில் இருந்து பால் வடிகின்றது!!

சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் வேப்பமரத்தில் இருந்து பால் வடிகின்றது. அதைப் பெருமளவு மக்கள் பார்வையிடுவதோடு, பாலைப் போத்தல்களில் எடுத்தும் செல்கின்றனர். கடந்த வருடம் இந்தப் பகுதியில் உள்ள வேறொருவரின் வீட்டிலும் இவ்வாறு வேப்ப மரத்திலிருந்து 15 தினங்களுக்கு மேலாக பால்வடிந்ததது. மருத்துவ நிவாரணியான வேப்பம் பாலை மக்கள் ஆர்வத்துடன்...

சாவகச்சேரியில் புலி படம் பார்த்தோர் மீது மாடு மோதியது

சாவகச்சேரியிலுள்ள திரையரங்கில் புலி திரைப்படத்தை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இருவர், வீதியின் குறுக்காகச் சென்ற மாட்டுடன் மோதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். முழங்காவில் பகுதியைச் சேர்ந்த சிவானந்தராஜா சுமன் (வயது 28), சரசாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் தனுசன் (வயது 17) ஆகிய இருவருமே...

யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற...

முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி துறைமுகத்தை வளலாயில் அமைப்பது சாத்தியமற்ற செயல்! – டக்ளஸ்

யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சென்ற வாரம் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா அவரகள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...

கூட்டுறவாகச் செயற்பட்டதால் பப்பாசிப் பழ ஏற்றுமதியில் வவுனியா விவசாயிகள் சாதனை

பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப் பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி...

தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் கடந்த முதலாம் திகதி மூன்று பிரதான கட்சிகளுடன் எனது தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு...

வெற்றிடங்களை நிரப்ப யாழில் நேர்முகத்தேர்வு

முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி தனியார் கம்பனியிடமிருந்து 500...
Loading posts...

All posts loaded

No more posts