- Friday
- November 21st, 2025
வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில்...
முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப் பதில் உள்ள பல தடைகளையும் தாண்டி வெகுவிரைவில் மக்களின் பிரச்சினை களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்ப டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், சரணடைதல் தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் சரணடைந்த போது,...
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் யாழ்பபாணத்தில் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள 32 முகாம்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4737 பேர் முகாம்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படைத்...
கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. நுகர்வோர் அதிகாரசபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொழும்பு நகரின் சில கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 37 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் அறிவித்துள்ளது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட குடிநீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ்...
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை வட மாகாண போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர்...
இலங்கையில் ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இன, மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே நாங்கள் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கையில் மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய விவகாரங்களாக இருந்ததுடன் கடந்த...
வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக்ககொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கணினியின் உபயோகத்துடன் பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய...
யாழ்.தேவி புகையிரதத்தில் மோதி முதியவர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதி வழியான 392 வது கிலோ மீற்றர் கட்டையை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் குருநகர் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் ஏனோக் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று காலை...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. கே. ஜயலத் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்....
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...
யாழ்.மாவட்ட நலன்புரி நிலையங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் நிலையியற் கட்டளை 23/2 நேற்றைய தினம் எழுப்பிய வினா யாழ்.மாவட்டத்தில் 32 நலன்புரி நிலையங்களில் 1318 குடும்பங்களில் 4737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய அடிப்படைத் தேவைகள் தொடர்பில் உரிய தரப்பினர் காலத்திற்குக்காலம் தேவையான நடவடிக்கைகளை போதியளவு எடுக்கவில்லையென்பதனை அறியத்தருவதுடன், யாழ்மாவட்டத்தில் யுத்தம்...
யாழ்ப்பாண மாவட்டம் 2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளார். [caption id="attachment_51180" align="aligncenter" width="365"] சோதிநாதன் வசீகரன்[/caption] யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்களான கனகராஜ் கவிலக்ஷன் 188...
நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் அதி உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட வாதப் பிரதிவாதங்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (06) ஆற்றிய உரை கௌரவ சபாநாயகர் அவர்களே…. இன்றைய நாளில் எமது எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலம் தொடர்பாக...
வேலை முடிவடைந்து வீடு திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் சிவனேந்திரன் தர்மதாசன் (வயது 26) என்பவரே கையிலும் காலிலும்...
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல்...
ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. வடக்கு ரயில் பாதையின் அம்பத்பொல - கல்கமுவ வரையான பகுதியில் ரயிலொன்று நேற்று தடம்புரண்டது. இதனால் வட பகுதிக்கான இரவு நேர தபால் ரயில்கள் நான்கும் இரத்துச் செய்யப்பட்டன. இதனையடுத்து நேற்று நள்ளிரவு 12.30 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் சீர்செய்யப்பட்டது, என்பது...
மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்துசபையினரின் ‘யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை’ வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நேற்று (06.10.2015) சென்றடைந்தது. பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களை குளிர்பானம் வழங்கி வரவேற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டார். இக்கடினமான நீண்டதூர பாதயாத்திரையை முன்னெடுத்துவரும் இலங்கை போக்குவரத்துசபையை...
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக நிதியுதவி பெற்றுக் கொள்வதற்கான மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தின் அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய பின்னர், மாகாணத்தின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் முதலமைச்சர்...
யுத்த காலத்தில் வடக்கில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததோடு நள்ளிரவிலும் கோவில் திருவிழாக்கள் முடிந்து வீடு திரும்பும் நிலை காணப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மரண தண்டனை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
