மதுபோதையில் இடையூறு விளைவித்த இருவருக்கு பொலிஸார் தர்மஅடி!

மதுபோதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் சந்தியில் நின்று சண்டை பிடித்துக்கொண்டு நின்ற இளைஞர்கள் இருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொடுத்த தர்ம அடியில் இளைஞர்கள் ஓடித்தப்பினர். ஏழாலை வடக்கு, சிவகுரு கடையடியில் நேற்று இரவு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மது போதையில் கெட்ட வார்த்தை பிரயோகங்களை பேசி...

விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வடக்கு மாகாண பொதுச் சேவையின் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வகுப்பு III தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 30.10.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்
Ad Widget

ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 06.11.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்

யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது. குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து...

பாரா­ளு­மன்­றத்­துக்குள் “காமத் தர­கர்கள்’

மத்­திய வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் இட­மாற்றம் தொடர்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை நிலை எழுந்­தி­ருந்த போது காமத்­த­ர­கர்கள் சபைக்குள் இருப்­ப­தாக இரு தரப்­பி­லி­ருந்தும் பரஸ்­பரம் கருத்­துக்கள் பரி­மா­றப்­பட்­டன. பாரா­ளு­மன்­றத்தின் நேற்­றைய அமர்வின் போது மேற்­படி விவ­காரம் தொடர்பில் சர்ச்சை எழுந்­தது. 200க்கு மேற்­பட்ட மத்­திய வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் இட­மாற்றம் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இது பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­யா­கவே இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும்...

தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பல...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு ஏன் நீக்கவில்லை? – நாடாளுமன்றில் சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்று நாடாளுமன்றில் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவில் அரசு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமையைவேண்டும் என்றும்...

தடுப்புக் காவலிலுள்ள தமிழ் இளைஞர்களை விடுவியுங்கள்! – நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தொடர்பான விடயத்தை சட்டரீதியாக மட்டுமே பாராது, நடைமுறைக்கு சாத்தியமான ரீதியிலும் கவனத்திலெடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்தை கொலைசெய்த கொலையாளி உள்ளடங்கலாக இலங்கையில் பாரதூரமான குற்றங்களைப் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று...

யாழில் இந்திய வர்த்தகர்கள் பங்குபற்றிய வர்த்தக மாநாடு

யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் கலந்துகொண்டிருந்தனர். ´யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இலங்கைக்கான...

இன்று முதல் பேஸ்புக்கில் 6 புதிய பட்டன்கள்!

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படுவது பற்றி பரிசிலித்து வருவதாக கடந்த மாதம் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது பேஸ்புக்கில் டிஸ்லைக்...

கலப்பு நீதிமன்றம் செயற்படுத்தப்படாது!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கலப்பு நீதிமன்றம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என மீண்டும் நினைவூட்டுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். தேசிய நீதிமன்ற அமைப்பில் இணைக்கப்பட்ட தேசியப் பொறிமுறை மூலமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று கொழும்பில்...

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இருவர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம்...

யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூற ஒரு பொது தினம் பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் அழிவு யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூற ஒரு பொது தினம் அவசியம். அதேபோல் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து மரியாதை செய்வதற்குப் பொதுவான நினைவுத் தூபி ஒன்றும் வடமாகாணத்தின் ஓமந்தைப்பகுதியில் பொருத்தமான இடத்தில் நிறுவவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

மல்லாகம் புகையிரத நிலையத்தின் அவலம்!

மல்லாகம் புகையிரத நிலையத்தில் அடிப்படை வசதிகள் எவையும் செய்யப்படாமையால் புகையிரதப் பாயணிகள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் மழை காலம் ஆரம்பித்துள்ளது இந்த நிலையில் புகையிரத நிலையத்தில் பயணிகள் தரித்து நிற்பதற்குக் கூட புகையிரத மேடையில் கூரைகள் எவையும் அமைக்கப்படாமையால் பயணிகள் மழை பெய்யும் வேளையில் பலத்த சிரமத்துக்கு உள்ளாகின்றார்கள். புகையிரத நிலைய...

இ.போ.ச. பஸ் மீது கோண்டாவிலில் கல்வீச்சு!

கோண்டாவில் டிப்போவில் நிறுத்துவதற்காக இரவு கொண்டு செல்லப்பட்ட பஸ் வண்டியின் மீது இனந் தெரியாதவர்கள் மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலையில் நிறுத்துவதற்காக வந்த வேளையில் டிப்போவுக்கு அண்மையாக...

சேகுவாரே நினைவு தினம் : யாழ் பொது நூலகத்திற்கு நூல்கள் அனபளிப்பு

சேகுவாராவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை ஒரு தொகுதி நூல்கள் யாழ் பொது நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிச இளைஞர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை யாழ். பொதுநூலக பிரதான...

வடமாகாண சபை முன் தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நிரந்தர நியமனம் கோரி வடமாகாண சபை முன்பு தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 09.00 மணி முதல், வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு, வவுனியா வடக்கு மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக நியமனம் கிடைக்கும் என...

மரண தண்டனைத் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க மரண தண்டனை நிறைவேற்றல் தீர்மானத்தை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். விரைவில் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றம் அமுலுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் வெளியான நிலையிலேயே இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையின்பேரில்...

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நேரடி ஒளிபரப்பு

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று(08)வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான அமர்­வுகளின்போது முதல் இரண்டு மணி­நே­ரத்­துக்கே இவ்­வாறு நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய பாரா­ளு­மன்ற விவ­கார தெரி­வுக்­குழு கூட்­டத்­தி­லேயே மேற்­படி...

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நிராகரித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேகோன் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு மற்றும் வேறு செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை அடுத்து இந்த தகவல்...
Loading posts...

All posts loaded

No more posts