Ad Widget

எப்படியும் வாழ முடியும் என்ற துர்ப்பாக்கிய நிலைக்குள் எமது சமூகம் – யாழ்.அரச அதிபரின் ஆதங்கம்

எமது சமூகம் மனித விழுமியங்களை இழந்து எப்படியும் வாழலாம் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ரீதியிலான முதியோர் நலன்பேணும் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த புதன்கிழமை யாழ்.சென் ஜோன்ஸ் அன்புலன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது சமூகத்தில் முதியோரை மதிக்காத பண்பும் அவர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்காத நிலையும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை மிகவும் பயனுள்ள விடயமாகும்.

முதியோருக்கென்று ஒரு அமைப்பு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அது பெரிய பலமாக அமைவதோடு அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய களமாக அமையும். அவர்களின் நலன்களை பேணுவதற்கு உரிய இடமாக இந்த அமைப்பு செயற்படவேண்டும்.

முதியவர்கள் எப்போதும் மதிக்கப்படவேண்டியவர்கள். விசேடவிதமாக கவனிக்கப் படவேண்டியவர்கள். அவர்களின் நலன்களை பாதுகாக்கும் அமைப்பினை பயனுள்ளதாகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு எம்மாலான உதவிகளை நாம் வழங்க முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts