- Sunday
- August 2nd, 2026
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பிலான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது . இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று இடம் பெற்ற கூட்டத்தின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் இன்று...
'திறமைக்கு தொழில்' தொழிற்சந்தை இம்மாதம் 20ஆம் திகதி காலை கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளது. கைத்தொழில் தொடர்பு அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் கொழும்பு மாவட்டச் செயலகத்தின் மக்கள் சேவை மத்தியநிலையம் இத்தொழில் சந்தையை ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் தொழில்சந்தையில் பங்குபற்றவிருப்போருக்காக பிரபல பேச்சாளர்...
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள் பயணிக்கும்போது விபத்துக்கள் நேர்வதாக சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இருவர் மாத்திரம் பயணிக்க கூடிய மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது நால்வர் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன் இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்...
மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் தலையில் கோடரி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் படுகாயமடைந்த குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு...
யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று நேரில் பார்வையிட்டு, உலர் உணவு பொதிகளையும் வழங்கினார். கடந்த 3 தினங்களாக யாழ்.குடாநாட்டிலும் பெய்த கனமழையினால் தாழ்நில பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தங்கியுள்ள கல்லாரை பகுதியை சேர்ந்த...
திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையடித்து வந்த நபரை, பிரதேச மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அப்துல் கலீம் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், நல்லூர்...
தமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நாடு முழுக்கவும் உள்ள...
காணாமற் போகச்செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரம் பேரின் விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஐ.நா. செயற்குழு பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமற் போகச்செய்யப்பட்டோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குறித்த குழுவிடம் கையளித்துள்ளது. குறித்த அறிக்கையில் காணாமற் போகச்செய்யப்பட்டோர் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர்...
"யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில்...
சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய்,...
இவ்வருடத்துக்கான மூன்றாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 04 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் (16) வட மாகாண பாடசாலைகளில் மூடப்பட்டமைக்குப்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் தடுப்புக் காவல், மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் டிசம்பர் 01ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க...
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களைச் சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 57 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 486 பேர் 42 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....
மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...
யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நேற்று பிற்பகல் யாழ் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செல்வராசா கஜேந்திரன் திருமதி பத்மினி சிதம்பரநாதன், மற்றும் சட்டத்தரணி திருக்குமார் ஆகியோர் சென்று கைதிகளை சந்தித்து...
அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் உரிய அளவில் வழங்கப்படுவதன் அவசியம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் வலியூறுத்தியூள்ளார். அண்மைக்கால அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை இவர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தம்மை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை போன்றவற்றில் இருந்த அரசியல் கைதிகள்...
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளில் உடல்நிலை அசாதாரண நிலைக்கு ஆளான எவரும் சிறைச்சாலைக்குள் இல்லை. அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேலைன் செலுத்தினோம் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார். உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகளின் நிலைவரம் தொடர்பாக கேட்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts



