மீன்பிடி தொழிலுக்கு விண்ணப்பம் கோரல்

தென்கொரியாவில், கடற்றொழில் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பிரஜைகளிடம் நடத்தப்படும் மொழி தேர்ச்சிப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள், தங்கல்ல, காலி, மாத்தறை ,சீதுவை மற்றும் திருகோணமலை ஆகிய பயிற்சி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும். கடற்றொழில்துறையில் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கும்...

இந்திய வீட்டுத் திட்டத்தை வழங்குவதில் பாலியல் இலஞ்சம் : விசாரணைகள் ஆரம்பம்

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது: வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை...
Ad Widget

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவின் சேவை பதவிகளுக்கு ஆட்சேர்த்தலுக்காக தகைமை பெற்ற இலங்கைப் பிரஜைகளிடமிருந்துவிண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதிக்கு 18 வயதுக்கு குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவரா கவும் இருத்தல் வேண்டும். கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப் பரீட்சையின் போது சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி....

ரணிலின் வெற்றிக்காக அங்கபிரதட்சணம் செய்த முன்னாள் இராணுவச் சிப்பாய்!

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக வர வேண்டும் என்று சியம்பலாகஸ்ஹேன பகுதியில் உள்ள அய்யநாயக்க கோயிலில் நேர்ந்து கொண்டிருந்தார்சிலாபம் ஆடிகமம் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான சனத் குமார என்ற முன்னாள் இராணுவ வீரர். இதனடிப்படையில், நேற்று அவர் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை அங்கபிரதட்சணமாக...

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்பு வந்தார் கருணா

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மெளலானா தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப் பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலிசாகிர்...

யாழில் வேலையின்மை அதிகரித்துள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையின்மையானது, 5.6சதவீதமாகக் காணப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு 5.1 ஆக இருந்த இந்த சதவீதமானது, தற்போது 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான தொழில்துறைகள் யாழ்ப்பாணத்தில் இல்லாமையால் அவர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீரக்க முடியவில்லை. இதனைவிட பட்டதாரிகள்...

வீடுகள் கிடைக்காத குடும்பங்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் வீடுகள் கிடைக்காத தனி நபர் மற்றும் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டோரின் விவரங்களை பிரதேச செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் மிகவும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடும்...

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்காக...

அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம்

நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும்வரை யிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். கொழும்பு, மெகஸின், சீ.ஆர்.பி அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்குமேலாக தடுத்து வைக்கப்பட் டுள்ள சுமார் 250இற்கு அதிகமான அரசியல் கைதி­க­ளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில்...

வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டம்

வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் அவரது உதவியாளர்களது சொந்த நிதி மூலம் மாதம் தோறும் வாழ்வாதார உதவிகள் வழக்கும் திட்டம் கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் கடந்த சனிக்கிழமை மாலை வடக்கு மாகாண அவைத் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள்,...

கிளிநொச்சியில் காலமானார் டேவிட் ஐயா

காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருத்துவமனையில் காலமானார். 1924 ஆண்டு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை – கரம்பொன்னில் பிறந்த சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர் லண்டன், கென்யா போன்ற நாடுகளில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார். நாடு திரும்பிய அவர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன்...

பட்டினிச்சாவுக் குற்றத்துக்கு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது -அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு, இலங்கை அரசு தமிழ் மக்களைப் பட்டினியால் கொலை செய்த பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

பருத்தித்துறையில் பண்பாட்டுப் பெருவிழா! : மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா நேற்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமானது. யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம...

வல்வெட்டித்துறையில் சிக்கிய வெள்ளை நாகபாம்பு!

வடமராட்சி, வல்வெட்டித்துறை, தெணியம்பை பகுதியில் வெள்ளைநிற நாகபாம்பு ஒன்று நேற்று அகப்பட்டுள்ளது. வீதியில் காணப்பட்ட 5 அடி நீளமான இந்த வெள்ளை நிற நாகபாம்பினை அப்பகுதி மக்கள் பிடித்து போத்தலில் அடைத்துவல்லிபுர ஆழ்வார் ஆலயப் பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் : வடக்கு முதல்வர்

கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...

கோப்பாய் பொலிஸாரின் அசமந்தம்; நீதி கேட்டு மரணவிசாரணை அதிகாரி வீட்டுக்கு மக்கள் படையெடுப்பு!

கோப்பாய் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி வீட்டுக்கு பொது மக்கள் நீதி கேட்டு சென்றனர். கடந்த முதலாம் திகதி திருநெல்வேலி சந்தையில் இருந்து வீடு திரும்ப முற்பட்ட கோண்டாவில் வடக்கு அன்னுங்கை வீர பத்திரர் கோவிலடியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான சண்முகம் கமலா என்பவர் மோட்டார் சைக்கிளால்...

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் அலுவலகங்கள் திறப்பு

வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (11) பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து...

பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று (10) யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வே நடைபெற்றது. கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவினர், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான...

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் இந்த செயற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவும், அதன் பின்னர் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல்...

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா மரணம்!

பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts