- Monday
- August 3rd, 2026
தாடியுடன் வீதியில் நடந்து சென்ற இரு இளைஞர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு இளைஞர்களுமே கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்- நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில்...
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது 97 வயதுடைய முதியவர் ஒருவருக்கு விபத்து மரணம் ஏற்படுத்திய சாரதியான கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்பவருககு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் இரண்டரை லட்ச ரூபா தண்டமும் விதித்துத்...
இலங்கை அரச படையினரின் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச...
தேசிய அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள கன்னி வரவு - செலவு திட்டத்தின் மூலம் அவர்களது பொருளாதாரக் கொள்கை தெளிவாகியுள்ளதுடன், தனியார் துறையை நோக்கிச் செல்லும் இப்பயணமானது நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மக்களுக்குச் சலுகைகளை வழங்கும் போர்வையில் பல முக்கிய சலுகைகளை இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள்...
2016ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 74 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி 2016 ஆம் ஆண்டுக்கான வருமானம் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 700 கோடி ரூபா, செலவீனம் 2 இலட்சத்து 78 ஆயிரத்து 700 கோடி...
ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் (Samantha Power, U.S. Permanent Representative to the United Nations) இன்று (21) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார். ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் சமந்தா தற்போது இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இவர் இன்று (21)...
புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கானதும் நாட்டின் 69 ஆவதுமான வரவுசெலவுத் திட்டத்தினை நேற்று (20) நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் வரவுசெலவுத் திட்டம் மீதான உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(21)...
எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த...
தாயகத்தில் யுதத்தினால் பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான உதவிப் பணியில் ஆறாவது ஆண்டினை வெற்றிகரமாக கடந்து கொண்டிருக்கும் உறங்கா விழிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வும் சிறப்பு மதிய விருந்துபசாரமும் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை (20-11-2015) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் போரினால் பாதிக்கப்பட்ட 125 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களும் வவுனியா...
இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசியக் கமரா மூலம் அறைகளில் நடைபெறுபவற்றை பதிவு செய்து வந்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிளக் பொயிண்ட் இன் ஒரு துவாரத்திற்குள் ரகசியக் கமரா வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலில் உள்ள அறைகளில் சூட்சுமமான முறையில் அந்தரங்க விடயங்கள் பதிவு செய்யப்பட்டு அவை வேறொரு...
கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின்...
2016 ஆம் ஆண்டுக்கானதும் 79 ஆவதுமான வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று (21) சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிப்பு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மூத்த தமிழ் ஊடகவியலாளரான ச.கதிரவேற்பிள்ளை வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார். ஊடக நிறுவனம் ஒன்றில் தனது ஊதியத்தை பெற வந்தபோது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார். தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இவர் செய்திகளை சேகரித்திருந்தார். பொலிஸாரின் தாக்குதலால் அவருடைய ஒரு கண் பார்வையை இழந்தார்....
தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நேர்மையாகவும் நீதியாகவும் பற்றுறுதியோடு செயற்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அனைத்து நடவடிக்கைகளிற்கும் தமிழர் விடுதலை கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்க்கமான...
தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள்...
திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக தமது ஆணைக்குழுவில் எவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும், அவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எமது ஆணைக்குழுவின் ஊடாக...
யாழ்ப்பாணத்தில் நாகதீபு என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் சரி, தகர்த்தெறிவோம் என்று ராவணபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம்...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கிடைக்கவேண்டிய 15ஆயிரம் பேருக்கும் கிடைக்கும் அதில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், 'புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்' என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...
வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும், கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14...
ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுச்சீட்டுக்கள் அதிபர்களுக்குக் கிடைத்ததும் உடனடியாக அவற்றை மாணர்களிடம் வழங்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நுழைவுச்...
Loading posts...
All posts loaded
No more posts
