பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பின் விசத்தை முறியடிக்கும் மருந்து கண்டறியப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார்.

இதுவரையில் பாம்பு தீண்டலுக்கு எதிரான மருந்து இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்ததோடு இது மிகவும் செலவு மிக்கதாக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts