- Friday
- November 21st, 2025
யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் நண்பகலளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வடமாகாணத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெர்னாண்டோ இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் எ.ஜயசிங்க இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பினர் சென்றபோது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது. இந்த...
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது...
நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள்...
யாழ். மறை மாவட்டத்தின் 8 ஆவது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து இந்த அறிவிப்பை இளைப்பாறிச் செல்லும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தனது குருத்துவ வாழ்வில் 25...
நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்...
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தனிப்பட்ட ரீதியில் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. பொதுவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதனால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' - இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும்...
வடக்கில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக சுமார் 108 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்த ஒப்பந்தம் நேற்று இலங்கையின் ஜப்பானுக்கான தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கன்னி வெடி அகற்றும் பணிகளுக்காக 2003ம் ஆண்டு முதல் 27.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, என்பது...
சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதனால் SUZUKI, HONDA, NISSAN போன்ற மோட்டார் வாகனங்களில் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Toyota போன்ற வாகனங்களுக்கான சுங்க வரிகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, Toyota Aqua மோட்டார் வாகனத்தின் சுங்க வரி ரூபா 770,000 இனால் அதிகரிக்கப்பட்டதுடன் Toyota Axio...
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை சார்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட...
காடழிப்பை ஜனாதிபதியால் கூட தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவு, கொத்தம்பியாகும்பம் என்ற இடத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம் மக்கள் குடியேற்றப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது. பின்னர் 73 வயதான...
நாட்டில் அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தடுக்கபட்ட வேண்டும், துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், குற்றத்துடன் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராககூடாது போன்ற கோரிக்கைகளை முனவைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது....
இலங்கையில் சிறார்கள் மத்தியில் சுத்தம்- சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் யுனிசெஃப் அமைப்பின் வேலைத்திட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வந்துள்ளார். யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ணத் தூதுவரான சச்சின் டெண்டுல்கருடன் இலங்கையின் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனும் இந்தப் பணிக்காக கைகோர்த்துள்ளார். பள்ளிக்கூடங்களில் சிறார்களிடத்தில் சுத்தம்- சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தமக்குக் கீழ் மூன்று ஆயுதக் குழுக்களை செயற்படுத்தி வெள்ளைவான் கடத்தலை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி மூன்று குழுக்களும் கடத்தல் தொடர்பான செயற்பாட்டினை பகுதி பகுதியாக திட்டமிட்டு மேற்கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று குழுக்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மானின்...
விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே போராடினார்கள். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களும் அரசியல் கைதிகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடங்குவார்கள் என்று, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிறைகளில், அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே,...
Loading posts...
All posts loaded
No more posts
