Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர சந்திப்பு; முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடத்தப்பட இருக்கின்ற விசாரணை சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் இராணுவத்தினரிடம் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான முக்கிய பல விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு மற்றும் ப்ளோட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts