‘புகை’ கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டும்

புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும் போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை...

ரயில் சேவைகள் இரத்து

ராகம ரயில் நிலையத்தில் வைத்து ரயில் சாரதியொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து 18 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. ராகம ரயில் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்த போராட்டம் காரணமாகவே இந்த ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Ad Widget

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக்வும் – தவராசா

பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித்...

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு

கனடாவில் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியை சேர்ந்த கைலாயபிள்ளை குடும்பத்தினரால் தமது குடும்ப அங்கத்தவர்கள் நினைவாக வட்டக்கச்சி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உதவி அமைப்பாளர் மயில்வாகனம் விமலாதரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேற்படி நிகழ்வில் பாடசாலையின் உபஅதிபர்,...

வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் கல்வியை தொடரும் சிறார்கள்

வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகததுக்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். யாழ். ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள், கழிவுகள்...

நிலையான நல்லிணக்கத்திற்கான அரசின் அர்ப்பணிப்பு தெளிவானது! – சமந்தா

"இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு தெளிவானது." - இவ்வாறு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது!

நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு எதிர்பார்ப்புடன் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தொழிலுக்கேற்ப தொழிற் கல்வி ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (23) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த...

தமிழர்களுக்கு அமெரிக்கா ‘100 சதவீத ஆதரவு’ – சமந்தா தெரிவித்ததாக சம்பந்தன்

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என அமெரிக்க உயரதிகாரி சமந்தா பவர் உறுதியளித்தார் என சம்பந்தன் தெரிவித்தார். ஐ நாவுக்கான அமெரிக்காவின் நிரந்திரப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்தரப்பினரை சந்தித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமந்தா பவரை சந்தித்து பேசினர். அச்சந்திப்பில் போருக்கு பின்னரான...

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்

கச்சதீவுக்கு அண்மையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்தியா, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. நடுக்கடலில் வைத்து இந்திய மீனவர்களை கற்களால் அடித்து இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள், இராமேஸ்வரம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையாளர் தென்மராட்சிக்கு விஜயம்

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (22) விஜயம்மேற்கொண்டதுடன் நாவற்குழி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டார். பாடசாலையின் அதிபர் திருமதி வசந்தாதேவி மேகலிங்கம் ஓய்வுபெறுவதையொட்டி, அவரை கௌரவிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கௌரவிப்பு விழாவை நடத்தியிருந்தனர். இந்நிகழ்வுக்கு எதிர்பாராதவிதமாக மஹிந்த தேசப்பிரிய வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட...

புகை பரிசோதனை கட்டணம் 4 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே

நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே புகை பரிசோதனைகளுக்காக 5000 ரூபாய் அறவிடப்படும் என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கோ அல்லது இரு சக்கர வாகனங்களுக்கோ இந்தக் கட்டணம் அறவிடப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து...

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சுந்தேகநபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 9 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்தியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் பெறப்பட்ட தடயப் பொருட்களின் ஆய்வு அறிக்கை...

புலிகளின் புதையலை தோண்ட முற்பட்டோருக்கு தடுப்புக் காவல்

பருத்தித்துறை, மணற்காடு பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அரச தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகையான நகைகள் மற்றும் பணம் என்பவற்றைத் தோண்ட முற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நால்வரையும் 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதி...

தமிழ்நாட்டில் உள்ள 42 அகதிகள் நாளை நாடு திரும்புவர்

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளில் இலங்கை தமிழ் அகதிகள் 42 பேர், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇலங்கையை வந்தடையவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத...

நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டும்!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உதவ காத்திருக்கின்றார்கள், எனவே, இந்த நாட்டில் நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதி...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது. மேலும் 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 572 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 273 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி...

Help for Smile என்ற புலம்பெயர் தமிழ் அமைப்பினால் வெள்ளநிவாரண உதவிகள்

தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் நாட்டின் ஹெல்ப் 4 சிமைல் (Help for Smile) என்ற புலம்பெயர் தமிழர்களது அமைப்பின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களுக்கு ஹெல்ப் 4 சிமைல் (Help for Smile)...

காதல் பிரச்சனைகளை தீர்க்கும் ஃபேஸ்புக்..!!

இண்டந்நெட் மூலம் உலக வாசிகளை மிகவும் எளிமையாக இணைத்த பெருமை கொண்ட சமூக வலைதளமாக ஃபேஸ்புக் இருக்கின்றது என்றே கூறலாம். தகவல் பறிமாற்றத்திற்கு வழி செய்வதில் துவங்கி இணையவாசிகளுக்கு இன்று பல்வேறு அற்புத சேவைகளை ஃபேஸ்புக் வழங்கி வருகின்றது. மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சேவைகளில் துவங்கி இன்றைய இளைஞர்களை குளிர வைக்கும் புதிய சேவையை...

புனர்வாழ்வுக்கு அனுப்பும் முதற்தொகுதி அரசியல் கைதிகள் விவகாரத்தில் சர்ச்சை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் முதற்கட்ட குழுவினர் தொடர்பாக சட்டமா அதிபர் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால்...

சந்திரனை சுற்றி வளையங்கள் : புயலுடன் கடும் மழை வரும் அபாயம்!!

சந்திரனை சுற்றி பல வர்ணங்களுடன் வெளிச்சமான வளையங்கள் தோற்றுவதன் ஊடாக எதிர்வரும் நாட்களில் புயலுடன் கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றும் என நட்சத்திர உயிரியல் விஞ்ஞான ஆய்வு நிபுணர் கீர்த்தி விக்கிரமரத்ன எதிர்வு கூறப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வானவில்லைப் போன்று சந்திரனைச் சுற்றி தோன்றியிருந்த வளையங்களை கடந்த சில நாட்களாக இரவு வானில்...
Loading posts...

All posts loaded

No more posts