Ad Widget

யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை!

புனர்வாழ்வு அதிகார சபையினரின் ஏற்பாட்டில் இம்மாதம் 29, 30 ஆந் திகதிகளில் உடுவில் மற்றும் கரவெட்டி பிரதேச செயலங்களில் நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கோப்பாய், தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உடுவில் பிரதேச செயலகத்தில் இம்மாதம் 29 ஆந்ததிகதி மு.ப 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரையும் பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி ஆகிய பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கரவெட்டி பிரதேச செயலகத்தில் இம்மாதம் 30 ஆந்ததிகதி மு.ப 8.00 மணிமுதல் பி.ப. 2.00 மணிவரையும் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளன.

இந்நடமாடும் சேவையில் ஏற்கனவே புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வீடு சொத்தழிவு, கடும் பாதிப்புகான நஷ்ட ஈடு, மதஸ்தலங்களுக்கான நஷ்ட ஈடு போன்றவற்றிற்கான பூரணப்படுத்தப்படாத கோவைகள் புனர்வாழ்வு அதிகார சபையினரால் எடுத்து வரப்பட்டு அன்றைய தினம் பூரணப்படுத்தும் நிகழ்வே இடம்பெறவுள்ளது.

இதில் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர், செயற்பாட்டுத் பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related Posts